செய்திகள்

டால்மியா பாரத் சுகர் அன்ட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வருவாய் ரூ.898 கோடியாக அதிகரிப்பு

ஜூனில் முடிந்த காலாண்டில்

டால்மியா பாரத் சுகர் அன்ட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வருவாய் ரூ.898 கோடியாக அதிகரிப்பு

திருச்சி, ஆக.01-

டால்மியா பாரத் சுகர் அன்ட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஜூன் 30-–ல் முடிந்த காலாண்டிற்கான தணிக்கை செய்யப்படாத ஒருங்கிணைந்த நிதிநிலை முடிவுகளை அறிவித்துள்ளது. ஜூன் 30–-ல் முடிந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் இதுவரை இல்லாத அளவுக்கு 898 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

வட்டி, வரி, தேய்மானம் மற்றும் கடன் தொகை ஆகியவற்றிற்கு முன் இதன் வருவாய் 213 கோடி ரூபாயாகவும், வரிக்கு பிந்தைய லாபம் 126 கோடி ரூபாயாகவும் உள்ளது. இந்த காலாண்டில் எப்போதும் இல்லாத வகையில் டிஸ்டில்லரி விற்பனை உயர்ந்துள்ளது.

மேலும் சர்க்கரை ஏற்றுமதி 1 லட்சம் மெட்ரிக் டன்னாக உள்ளது. மேலும் ஜவகர்பூர், நிகோகி மற்றும் கொல்காபூர் ஆகிய 3 இடங்களில் உள்ள டிஸ்டில்லரி தொழிற்சாலையில் சானிடைசர் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளது. சர்க்கரை தொழில்துறை இந்தியாவில் சர்க்கரை உற்பத்தியானது கடந்த ஆண்டு செப்டம்பர் மாத முடிவில் 14.5 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்தது. அது தற்போது இந்த ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் 11.3 மில்லியன் மெட்ரிக் டன்னாக குறைய வாய்ப்பு உள்ளது.

இருப்பினும் வரவிருக்கும் காலக்கட்டத்தில் அதன் உற்பத்தி 11.8 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பு, ஏற்றுமதி மானியம் போன்ற பல்வேறு செயல்திறன்மிக்க நடவடிக்கைகள் எஸ்எஸ் 20-–21–க்கு மத்திய அரசால் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இது தொழில்துறைக்கு சாதகமாக இருக்கும். இருப்பினும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் நியாயமான மற்றும் மறுசீரமைப்பு விலை அதிகரிப்புக்கு வாய்ப்பு உள்ளது. ஒட்டுமொத்தமாக இந்ததுறை நன்கு வளர்ச்சி அடையும் என்ற நம்பிக்கையுடன் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *