செய்திகள்

டாக்டர். ராமகிருஷ்ணன் நினைவாக லண்டன் மருத்துவர் ஆப்ரகாம் செரியன் சொற்பொழிவு

Spread the love

சென்னை, ஆக. 16

எழும்பூர் குழந்தைகள் மருத்துவனையை நவீனப்படுத்தி இந்தியாவில் முதல் முறையாக குழந்தைகளுக்கு ஆபரேஷன் துவக்கிய டாக்டர். ராமகிருஷ்ணன் நினைவாக லண்டன் மருத்துவர் ஆப்ரகாம் செரியன் சிறப்பு சொற்பொழிவாற்றினார்.

நுங்கம்பாக்கம், சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனை சேர்மன் மாதங்கி ராமகிருஷ்ணன், டாக்டர்கள் ரவி குமார், பிரியா ராமகிருஷ்ணன், கோவை கங்கா மருத்துவமனை டாக்டர் ராஜசேகர், டாக்டர் முகமது ரேலா ஆகியோர் விழாவில் பங்கேற்றனர். சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவனையில் டாக்டர். எம்.எஸ். ராமகிருஷ்ணன் ஆற்றிய பணியை நினைவு கூர்ந்து மார்பளவு சிலை நிறுவப்பட்டது.

இந்த விழாவில் குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை பற்றி டாக்டர். எம்.எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய நூல் வெளியிடப்பட்டது. பதிப்பாளர்: பராஸ் நிறுவனம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *