செய்திகள்

டாக்டர் மோகன் நீரிழிவு மருத்துவமனை சார்பில் கோபாலபுரம் மாநகராட்சி திடலில் பிரம்மாண்ட யோகா பயிற்சி

Spread the love

சென்னை, ஜூன். 19–

டாக்டர் மோகன் நீரிழிவு நோய் மருத்துவமனை சார்பில் கோபாலபுரம் மாநகராட்சி திடலில் பிரம்மாண்ட யோகா பயிற்சிக்கு இதன் சேர்மன் டாக்டர் வி.மோகன் ஏற்பாடு செய்துள்ளார். இந்நிகழ்ச்சியை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் 20ந் தேதி துவக்குகிறார். இதில் பொதுமக்கள் பங்கேற்கலாம். 8056110000 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம் என்று சேர்மன் டாக்டர் வி.மோகன் தெரிவித்தார்.

உலக யோகா தினத்தையொட்டி யோகா பயிற்சி 20ந் தேதி காலை 7 மணி முதல் 8 மணிக்குள் கோபாலபுரம் மாநகராட்சி திடலில் நடைபெறுகிறது.

பிரபல யோகா பயிற்சி நிபுணர்கள் இப்பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பயிற்சி அளிக்கின்றனர். நீரிழிவு நோயாளிகளுக்கு கூடுதல் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. சேர்மன் வி.மோகன் சிறப்பு சொற்பொழிவுவாற்றுகிறார். அப்போது அவர் பேசுகையில், நீண்ட கால நோய் சிகிச்சையில் யோகா பயிற்சி உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, மருத்துவ பலன் வழங்குகிறது.

பாரம்பரிய யோகா, நீரிழிவு நோய் சிகிச்சைக்கு விரைவாக குணமாக உதவுகிறது. எனவே இப்பயிற்சியில் நீரிழிவு நோயாளிகளும், பொதுமக்களும் கலந்துகொள்ள வேண்டும் என்றார் டாக்டர் வி.மோகன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *