வாழ்வியல்

டயட் இருப்பவர்களுக்கு உதவும் நுங்கு

அதிக எடை கொண்டிருப்பவர்கள் உடல் எடையை குறைக்க பலவிதமான டயட் மேற்கொள்வதுண்டு. அதை கோடைக்காலங்களிலும் கடைப்பிடிக்கும் போது உஷ்ணம் சம்பந்தமான பிரச்சனைகள் வரக்கூடும்.

மன அழுத்தம் நீங்க சிம்பிளான இந்த 10 விஷயம் நிச்சயம் உதவும்.

இவர்கள் தினமும் 3 நுங்கை அரை டம்ளர் நீரில் ஊறவைத்து நன்றாக மசித்து வேண்டிய அளவு நீர் விட்டு குடித்துவரலாம். டயட் பிரச்சனையால் உடலுக்கு வரக்கூடிய உஷ்ணப் பிரச்சனைகள் வராமல் இருக்கும். அதோடு நுங்கில் இருக்கும் கனிமச்சத்தும் ஊட்டச்சத்தும் உடலில் குளுக்கோஸ் அளவை சீராக வைத்து உடலை சோர்வின்றி சுறுசுறுப்பாக வைத்திருக்கும். கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையையும் குறைக்க உதவும். குறைந்த கலோரி கொண்டிருப்பதால் இவை நீண்ட நேரம் உங்கள் பசியை ஊக்குவிக்காது.

குறிப்பு நுங்கு மிக மிக நல்லது என்பதில் மாற்றுகருத்தில்லை. ஆனா வாங்கிய உடன் அல்லது நுங்கை பிரித்து எடுத்த சில மணி நேரங்களில் பயன்படுத்திவிட வேண்டும்.

நுங்கை குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்த கூடாது.

அளவுக்கதிகமாக சாப்பிட்டால் வயிற்று வலியை உண்டாக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *