செய்திகள்

ஞாயிற்றுக்கிழமைகளில் ‘டாஸ்மாக்’ கடைகள் மூடல்

சென்னை, ஏப்.19-

தமிழகத்தில் கொரோனா புதிய கட்டுப்பாடுகள் காரணமாக ஞாயிற்றுக்கிழமைகளில் ‘டாஸ்மாக்’ கடைகள் மூடப்படும் என்றும் மற்ற நாட்களில் இரவு 9 மணி வரை இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசின் புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வருகிறது. இரவு நேர ஊரடங்கு காரணமாக இரவு 9 மணிக்கு மேல் கடைகள் திறந்திருக்க கூடாது என்ற உத்தரவு ‘டாஸ்மாக்’ கடைகளுக்கும் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. வழக்கமாக ‘டாஸ்மாக்’ கடைகள் இரவு 10 மணிக்கு மூடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போன்று முழு ஊரடங்கான ஞாயிற்றுக்கிழமை அன்று ‘டாஸ்மாக்’ கடைகள் நாள் முழுவதும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *