சிறுகதை

ஞாபகம் | ராஜா செல்லமுத்து

Spread the love

மணி சார், இப்போ எங்க இருக்கீங்க?

‘ வீட்டில ‘

‘ ஓகே சார், நீங்க ஃபங்ஷனுக்கு எப்படி வர போறீங்க?’

‘ நீங்க சொல்லுங்க துரை ‘

‘ உபர், ஓலா இதில் ஏதாவது வருவீங்களா?

‘ ஓ. கே. எதுனாலும் பரவாயில்லே ‘ என்ற மணியன், பரபரவென கிளம்பிக்கொண்டிருந்தார். அவர் கை கால்கள் இறக்கை கட்டிக் கொண்டு பறந்தது. உடன் வரும் நண்பர் வேலுவிடம் விஷயத்தை சொன்னார்.

‘வேலு நீங்க எப்படி வரீங்க?’

‘ நீங்க சொல்லுங்க சார் ‘ என்று வேலு மணியிடமே விட்டு விட்டார்.

‘ அப்படின்னா, நீங்க உங்க இடத்திலேயே இருங்க. உங்கள வந்து நான் கூட்டிக்கிட்டு போறேன் ‘ என்ற மணியன், சிறிது நேரத்திற்கெல்லாம் டூவீலரில் விருவிருவென வேலுவின் வீட்டின் அருகே வந்தார்.

‘ வேலு, போகலாமா?

‘ எஸ் சார்,

‘ வண்டிய ஆபீஸ்ல விட்டுட்டு ஓலா, ஊபர்ல போயிறலாம் ‘

‘ எஸ், சார் என்ற வேலுவை வண்டியில் ஏற்றிக்கொண்டு விரைந்தார் மணியன்.

அலுவலகத்தில் டூவீலரை விட்டு விட்டு இருவரும் ஆட்டோ புக் செய்து விழா இடத்திற்கு விரைந்தனர்.

அதுவரையில் நன்றாகப் பேசிக் கொண்டிருந்த மணி எனக்கு மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கியது.

சார் ஏன் எப்படி இருக்கிறீங்க?

ஐயையோ வீட்டில் தண்ணீர் குழாய் திறந்தேன், அதன் அடுத்த நிலை தெரியலையே. நான் குழாயைத் திறக்கும்போது தண்ணி வரல. மேல தண்ணீர் டேங்க்கில தண்ணீர் இல்ல, யாராவது மோட்டார் போட்டு டேங்க்கில் தண்ணீர் நிறைந்தால், குழாயில் தண்ணீர் வருமே, அப்படி வந்தா எல்லாமும் வேஸ்டா போகுமே ‘ என்று புலம்பித் தீர்த்தார் மணியன்.

‘ சார் அப்படியெல்லாம் இருக்காது, கண்டிப்பாக குழாய் அடைச்சிருப்பீங்க’

‘ இல்ல வேலு, எனக்குத் திறந்து விட்டது மாதிரி தான் ஞாபகம் இருக்கு ‘

‘ இல்ல சார் இருக்காது ‘

‘ இல்ல வேலு தண்ணி வேஸ்டா போகும் ‘ அதான் ஒரு மாதிரியா இருக்கு. சார், கண்டிப்பா நீங்க குழாயை அடைத்து விட்டு விட்டு தான் வந்திருக்கீங்க ‘ அப்படியா சொல்றீங்க’

ஆமாம் சார்.

சரி சரி என்ற மணியன், கொஞ்ச நேரம் சும்மா இருந்துவிட்டு மீண்டும் பழைய பல்லவியையே பாடினார்.

சார் அப்படி எல்லாம் இருக்காது.

அப்படின்னு சொல்றீங்க ஆமாம் சார் என்ற மணியன் பேசுவதற்கும் மறு பதில் சொல்லிக் கொண்டே இருந்தார். ஆட்டோ ஓட்டுனருக்கு கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்தது.

‘என்னையா சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிட்டு இருக்காரு, ஒருவேளை இவருக்கு மறதி நோயா இருக்குமோ?’ என்ற ஆட்டோக்காரன் இருவரையும் கண்ணாடி வழியாக பார்த்து கொண்டே வந்தான்.

சிறிது நேர ஆட்டோ பயணம். ‘இல்ல’ எனக்கு ஞாபகமில்லை, மணியன் சொல்ல,

சார் கண்டிப்பா அடைத்திருப்பீங்? என்றான் வேலு.

அதுக்குள்ள வீட்ல யாரும் இல்லையா அது பாட்டுக்கு தண்ணீர் விழுந்து, வேஸ்டாபோயிடும், அதான் ஒரு மாதிரியா இருக்கு என்று மீண்டும் பழைய பல்லவியையே பாடினார் மணியன். அதுவரையில் அவர் சொன்னதற்கு பதில் சொல்லிக் கொண்டிருந்த வேலு தற்போது வாயை திறக்கமால் இருந்தான்.

என்ன வேலு, ஒன்னும் இல்ல சார், வாய் திறக்காமல் தலையை மட்டுமே ஆட்டினான் வேலு.

ஆட்டோ ஓடிக்கொண்டே இருந்தது, அதற்குள் ஓர் ஆயிரம் தடவை அதையே சொல்லி இருப்பார். ஓரிரு தடவை பதில் சொன்ன வேலு வேறு சில நேரங்களில் பதில் சொல்லாமலேயே தலையை மட்டுமே ஆட்டினான்.

ஆட்டோகாரனும் ஆளை இறக்கி விட்டா போதும்டா சாமி என்றவன் ஒருவழியாக விழா மண்டபத்தின் முன்னே இருவரையும் விரட்டி விட்டு தலைதெறிக்க ஓடினான்.

விழா மேடைக்கு போய் விழாக்குழுவினர் இடையே மறுபடியும் அதே பழைய பல்லவியை பாட ஆரம்பித்தார் மணியன். விழா ஆரம்பமானது. விழா பற்றிய எண்ணங்கள் எதுவும் மணியனுக்குள் ஓடவில்லை. மனம் முழுவதும் வீட்டில் திறந்துவிட்ட குழாயை பற்றிய குவிந்து கிடந்தது.

சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்ட மணியன், விழா பற்றிய வாழ்த்துக்கள் மனதில் இருந்தாலும் தண்ணீர் குழாய் என்ற வார்த்தையையும் பேச்சினூடே விட்டார்.

என்னது, தண்ணீர் குழாயை திறந்து விட்டால், என்ன சிறப்பு பேச்சாளர் இப்படி பேசிட்டு இருக்காரு என்ற மக்கள் மனிதனை ஒருமாதிரியாக பார்க்க.

விழா முடிந்ததும் மணியன், ‘நான் எப்படி பேசினேன் வேலு’ என்றார்.

சூப்பர் சார் கண்டிப்பா நீங்க நல்லா பேசினீங்க என்றார் வேலு.

பின்னர் மணியன் வேலுவிடம், ‘வீட்டுக்கு போய் விட்டு நான் கூப்பிடுறேன்’ என்றார்.

ஓகே சார் இருவரும் பயணமானார்கள்.

வேலு ஒரு நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டான். மணியன் மீண்டும் பயணமானார்.

வீட்டிற்கு வந்த வேலு அப்பாடா என்று பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தபோது மணியன் போன் செய்தார். ஹலோ, தண்ணீர் குழாயை அடைத்து விட்டு தான் வந்து இருக்கேன் என்றபோது அதுதான் சார் முதல்ல இருந்து சொல்லிட்டே இருக்கேன் என்றார் வேலு. மேலும் பாபாவுக்கு பத்து ரூபாய் போடுவது என்று வேண்டி இருந்தேன் என்றார் மணியன்.

பாபாவுக்கு பத்து ரூபாயா என்று மறுபடியும் மனியன் பேச, வேலுவுக்கு 360 டிகிரியில் தலை சுற்றியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *