கதைகள் சிறுகதை

ஞாபகம் – ஜெ.மகேந்திரன்

Makkal Kural Official

‘தினேஷ்’, போய் பலகாரங்கள் வாங்கி வாடா; சாப்பிடலாம். ‘சரிம்மா மிளகு முருக்கு, அடை, மசால் வடை, மைசூர்பாகு, ஜிலேபி இவைகள் வாங்கி வருகிறேன்.

அப்படியே ஐஸ்கிரீமையும் வாங்கி வா. அப்போது தான், காரத்துக்கு ஈடு குளிர்ச்சி.

சரி போடா, வாங்கி வா.

அம்மா, பவானி. நீ போய் என், இரவிக்கையை கடைத் தெருவில் இருக்கும் மணி அண்ணனிடம் வாங்கி வா. இந்தா இந்த 400 ரூபாயை அம்மா கொடுத்தாங்கனு கொடு. அப்படியே, ஒரு பிளாஸ்டிக் பக்கெட் வாங்கி வாடி. ரூமையெல்லாம் சுத்தம் செய்யணும்.

அதற்குள் பவானியின் தோழி, யேய், நாம் கடைத் தெருவுக்கு சென்று ஒரு அம்மன் படம் வாங்கணும் வாடி என்றாள்.

இருவரும் கிளம்பினர்.

முதலில் பவானி அண்ணே, அம்மாவின் இரவிக்கையை அம்மா வாங்கி வரச் சொன்னாங்க. இந்தாங்க 400 ரூபா. சரிம்மா இரவிக்கையை வாங்கிக் கொண்டு சற்று தொலைவில் உள்ள பேன்ஸி கடையில் ஒரு பிளாஸ்டிக் பக்கெட் வாங்கினாள். 350 ரூபாயை கொடுத்து விட்டு தட்டிப் பார்த்து, உள்ளே பார்வையை நுழைத்து ஓட்டை இருக்கிறதா எனப் பார்த்து வாங்கினாள்.

உடனே தோழி மேகலா, ஒரு கருமாரியம்மன் படத்தை வாங்கினாள். அவளை அவள் வீட்டில் பைக்கில் விட்டுவிட்டு வீட்டுக்கு வந்தாள்.

அதற்குள் தினேஷ் அக்கா வருவதற்குள் முறுக்கு, அடை, மைசூர்பாகு இவைகளை தின்ணு முடித்து விட்டான். அம்மா பார்வதி, பவானி நீ போய் கடவுளுக்கு 2 பாட்டெல் பூஜை எண்ணெய்யை வாங்கி வா என்றாள்.

இவள் சரியாக புரிந்து கொள்ளாமல் ஒரு பாட்டில் வாங்கி வந்தாள்.

அம்மா பவானி, என்னடி 2 பாட்டெல் வாங்கி வரச் சொன்னால் ஒன்று வாங்கி வந்திருக்கிறாய்.

எனக்கு மனது ஏதோ மாதிரி உள்ளது, சரிம்மா, சாரி எனக்கு பூஜை அறையில், சாமிக்கு எண்ணெய் ஊற்றி விளக்கை ஏற்றி விட்டு வந்து ரூம் பக்கத்தில் பார்வதியும் பவானியும் முறுக்கு, அடை, மைசூர்பாகு, ஜிலேபி இவைகளை சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சாமியின் கீழே உள்ள துளியில் நெருப்பு பட்டு துணி எரிந்து விட்டது. அம்மா, என்ன புகை நாற்றம் சாமிப் படம் புகையாக இருந்தது.

அம்மா நான் 2 எண்ணெய் பாட்டில் வாங்கி வா என்றேன். நீ ஞாபகமில்லாமல் ஒரு பாட்டில் வாங்கி வந்தது இப்படி திருப்தியில்லாமல் அபசகுணம் மாதிரி ஆகி விட்டது. இனி மேலாவது எல்லாவற்றிலும் ஞாபகம் இருக்கட்டும். முக்கியமாக கடவுள் விஷயத்தில் அதிக ஞாபகமிருக்கட்டும். புரிஞ்சதா மறைமண்டை என்றாள்.

சரிம்மா, இனிமேல், ஞாபகம் வைத்துக் கொள்கிறேன். சரிம்மா பார்வதிக்கு இப்போது தான் திருப்திகரமாக இருந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *