செய்திகள்

ஜோலார்பேட்டை ரெயில் பாதை 4 கி.மீட்டருக்கு புதுப்பிக்கப்பட்டு ரெயில் 110 கி.மீட்டர் வேகத்தில் செல்லும்

Spread the love

கொரோனா ஊரடங்கு காலத்தில்

ஜோலார்பேட்டை ரெயில் பாதை 4 கி.மீட்டருக்கு புதுப்பிக்கப்பட்டு ரெயில் 110 கி.மீட்டர் வேகத்தில் செல்லும்

சென்னை, மே. 23–

ஜோலார்பேட்டையில் நடைபெற்று வந்த ரெயில்வே யார்டு மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. இதனால் சென்னையிலிருந்து அந்த வழியாக இயக்கப்படும் கோவை, பெங்களூரு விரைவு ரெயில்கள் இனி 110 கி.மீ வேகத்தில் கடந்து செல்ல முடியும். இதன் மூலம் 20 நிமிடங்கள் பயண நேரத்தையும் சேமிக்க முடியும்.

இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டத்தில் ஜோலார்பேட்டை சந்திப்பு முக்கியமானதாக உள்ளது. இந்த வழியாக சுமார் 190 ரெயில்கள் தினமும் இயக்கப்படும். ஜோலார்பேட்டை யார்டில் அதிகமாக வளைவுகள் இருப்பதாலும், தண்டவாளங்கள் பழையதாக இருப்பதாலும் அந்த இடத்தை வேகமாக கடந்து செல்வதில் சிக்கல் இருந்து வந்தது.

இந்நிலையில் அங்கு தேர்வு செய்யப்பட்ட சுமார் 4 கி.மீ தூரத்துக்கு தண்டவாளங்களை புதுப்பித்து, யார்டு மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த 14-ம் தேதி தொடங்கிய இந்த பணிகள் நேற்று முன்தினம் நிறைவுபெற்றன. இனி இந்த வழியாக செல்லும் கோவை, பெங்களூரு விரைவு ரெயில்கள் 110 கி.மீ வேகத்தில் கடந்து செல்ல முடியும். இதன் மூலம் 20 நிமிடங்கள் பயண நேரத்தையும் சேமிக்க முடியும்.

ஜோலார்பேட்டை ரெயில் பாதை 4 கி.மீட்டருக்கு மாற்றப்பட்டு ரெயில் 110 கி.மீட்டர் வேகத்தில் செல்ல முடியும். பயண நேரம் 20 நிமிடம் குறையும்.

குறுகிய வளைவு ரெயில் பாதையின் வளைவு நீட்டிக்கப்பட்டது. இதனால் அந்த இடத்தில் இனி மணிக்கு 100 கி.மீ வேகத்தில் ரெயில் செலுத்த முடியும். தனி சரக்கு ரெயில் நிறுத்தும் இடம் நிறுவப்பட்டதால், பெங்களூர் ரெயில் தடையின்றி நிறுத்தாமல் செல்ல முடியும். 42 மெயின் சிக்னல் புதுப்பிக்கப்பட்டது. 24 சார்பு சிக்னல் சீரமைக்கப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது பற்றி அறிய www.sr.indian railways gov.in வலைதளம் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *