செய்திகள்

ஜெருசலேம் புனித பயணம் செய்பவர்கள் 30–ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் பொன்னையா அறிவிப்பு

Spread the love

காஞ்சீபுரம், செப். 11–

ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசின் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த கிறித்தவர்களிடமிருந்து 30–ந் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று கலெக்டர் பொன்னையா அறிவித்துள்ளார்.

இது குறித்து கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசின் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள அனைத்து பிரிவினர்களை உள்ளடக்கிய 600 கிறித்தவர்கள் இதில் 50 கன்னியாஸ்திரிகள் /அருட்சகோதரிகள் புனித பயணம் மேற்கொள்ள அனுமதித்தும் அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. இப்புனித பயணம் செப்டம்பர் 2019 முதல் மார்ச் 2020 வரை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதற்கான விண்ணப்பப்படிவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலிருந்து கட்டணமின்றி பெறலாம். தவிர, www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பப்படிவத்தை படியிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம். இத்திட்டத்திற்கான நிபந்தனைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கான காலக்கெடு 30.09.2019 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நல அலுவலர், மாவட்ட கலெக்டர் அலுவலகம் / சிறுபான்மையினர் நல இயக்குநரகம், தொலைபேசி எண்.044-28520033-த்திலும் தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *