செய்திகள்

ஜெயிலர் திரைப்படம் நாளை ரிலீஸ்; இமயமலை சென்றார் நடிகர் ரஜினிகாந்த்

சென்னை, ஆக. 9–

நடிகர் ரஜினிகாந்த் 4 ஆண்டுகளுக்கு பின் இன்று இமயமலை புறப்பட்டு சென்றார்.

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த், தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்கு பயணிப்பது வழக்கம். உடல்நலக்குறைவு காரணமாக 2010ம் ஆண்டுக்கு பிறகு இமயமலை பயணத்தை அவர் தவிர்த்து வந்தார்.

ஆனால் 2018ம் ஆண்டில் ‘காலா’, ‘2.0’ படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்கு சென்றார். அதன்பிறகு கொரோனா சூழல் காரணமாக பயணத்தை தவிர்த்து வந்தார். இதனிடையே நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ படம் நாளை ரிலீஸ் ஆக உள்ளது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று இமயமலை பயணத்தை தொடங்கி உள்ளார். இன்று காலை 8 மணி அளவில் போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் இருந்து விமான நிலையத்துக்கு காரில் புறப்பட்டு சென்றார். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் கூறுகையில், கொரோனா காரணமாக இமயமலை செல்ல முடியாமல் இருந்தது. தற்போது 4 ஆண்டுகளுக்கு பின் இமயமலைக்கு செல்கிறேன்’ என்றார். ஜெயிலர் திரைப்படம் எப்படி உள்ளது? படத்தில் நடித்ததில் உங்கள் அனுபவம் எப்படி உள்ளது? என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த நடிகர் ரஜினிகாந்த், படத்தை நீங்கள் பார்த்துவிட்டு கூறுங்கள்’ என்றார். ரஜினிகாந்த் சென்னையில் இருந்து விமானத்தில் பெங்களூரு சென்றார். பெங்களூரில் இருந்து அவர் இமயமலைக்கு பயணமாகிறார். இமயமலையில் ஒரு மாதம் வரையில் தங்கி இருக்க ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளார்.

ரஜினிகாந்த் தனது இமயமலை சுற்றுப்பயணத்தின் போது சித்தர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். தனது ஆன்மீக குருவான பாபாஜி குகைக்கு சென்று வழிபடவும் முடிவு செய்துள்ளார். மேலும் அவர் ரிஷிகேஷ், கேதர்நாத் உள்ளிட்ட இடங்களுக்கும் சென்று வழிபாடுகள் செய்ய திட்டமிட்டுள்ளார்.

இந்த பயணத்தின் போது தனக்கு உறுதுணையாக இருப்பதற்காக உதவியாளர் ஒருவரை ரஜினிகாந்த் அழைத்துச் சென்றுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *