செய்திகள்

ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் மலர் அஞ்சலி

வெற்றிகரமாக அண்ணா தி.மு.க. ஆட்சி முழுமையாக நிறைவு

ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் மலர் அஞ்சலி

சென்னை, பிப்.28-

பல்வேறு சவால்களை கடந்து வெற்றிகரமாக அண்ணா தி.மு.க. ஆட்சி முழுமையாக நிறைவு செய்துள்ளது. இதற்காக ஜெயலலிதா நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தி வணங்கினார்கள்.

தமிழகத்தில் 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அண்ணா தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 2011-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சி செய்த அண்ணா தி.மு.க., தனது 15-வது சட்டசபை பதவி காலத்தை முழுமையாக நிறைவு செய்துள்ளது.

2016ம் ஆண்டு டிசம்பர் 5ந்தேதி ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார். பல்வேறு சவால்களுக்கு மத்தியில் அவர் வெற்றிகரமாக அவர் தனது ஆட்சியை நிறைவு செய்துள்ளார்.

இந்த நிலையில், 15-வது சட்டசபையின் நிறைவு நாள் கூட்டம் நேற்று முடிந்ததும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர்கள், அண்ணா தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நேராக கலைவாணர் அரங்கத்தில் இருந்து மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்றார்கள்.

அங்கு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் மலர்வளையம் வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள். அவர்களை தொடர்ந்து, அமைச்சர்களும், அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள். இதேபோல் எம்.ஜி.ஆர். நினைவிடத்திலும் அனைவரும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *