செய்திகள்

ஜெயலலிதா, கருணாநிதி காலத்தில் கட்சித் தொடங்கியவன் நான்: நடிகர் விஜய் மீது சீமான் சீற்றம்

Makkal Kural Official

நாகர்கோயில், நவ. 12–

ஜெயலலிதா, கருணாநிதியை விட பெரிய தலைவரா? அவர்கள் வாழ்ந்த காலத்தில் கட்சித் தொடங்கியவன் நான் என்று நடிகர் விஜய் மீது சீமான் காட்டமாக பேசி உள்ளார்.

தவெக தலைவர் விஜயை, கட்சி தொடங்கியது முதல் சீமான் வரவேற்று பேசி வந்தார். அப்போது தம்பி, தம்பி என கூறி விஜயை புகழ்ந்து பேசிய சீமான், அவருடன் கூட்டணி வைப்பது போன்ற எதிர்பார்ப்பை உருவாக்கினார். ஆனால் விஜய் அண்மையில் நடைபெற்ற மாநாட்டில் தனது நிலைபாட்டை அறிவித்தார். இதையடுத்து விஜயின் நிலைபாட்டால் அதிருப்தி அடைந்த சீமான், விஜயை கடுமையாக சாடி வர தொடங்கினார்.

இதனால் விஜய் மற்றும் சீமான் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இதற்கிடையே சீமான் கட்சியை சேர்ந்தவர்கள் பலர், தவெகவில் இணைந்து வருகின்றனா். இது சீமானை மேலும் கோபமடைய செய்கிறது. இந்த நிலையில் விஜய் என்ன பெரிய தலைவரா? என்று சீமான் ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார்.

அவர்களைவிட பெரிய தலைவரா?

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கன்னியாகுமரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,” ஜெயலலிதா, கருணாநிதி இருந்த காலத்தில் கட்சி தொடங்கியவன் நான். ஜெயலலிதா, கருணாநிதியை விட விஜய் பெரிய தலைவரா?. அவர்கள் கூட்டாத கூட்டத்தையாக விஜய் கூட்டிவிட்டார். விஜயால் எனது வாக்கு வங்கி பாதிக்கும் என கார்த்திக் சிதம்பரம் கூறி உள்ளார். நான் கார்த்திக் சிதம்பரத்தை போட்டிக்கு அழைக்கிறேன்.

ஒரே தொகுதியில் போட்டியிடுவோம். ஒரு ரூபாய் கொடுக்காமல் யார் வெற்றி பெறுகிறார் என்பதை பார்ப்போம். கூட்டணி கண்டிப்பாக வைக்க கூடாது. நான் தனித்து போட்டியிட்டு ஒன்றரை லட்சம் வாக்குகள் பெற்று உள்ளேன். இன்னும் ஓராண்டு தான் இருக்கிறது. 2026 ஆம் ஆண்டு தேர்தல் முடிவில் நான் யார் என்று தெரியும்.

என்னை விரும்பிய மக்கள், பொழுதுபோக்கு தளத்தில் தலைவர்களை தேடியவர்கள் அல்ல. என்னை பின்தொடரும் மக்கள் அனைவரும் போராட்ட களத்தில் தலைவரை தேடுபவர்கள். எனது கட்சியில் இருந்து பிற கட்சியில் சேர்ந்தவர்கள் என கூறுவோர், அவர்களிடம் உள்ள நாதக கட்சி உறுப்பினர் அட்டையை காட்டட்டும் என்றும் கூறி உள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *