சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க கோரிக்கை
ஐதராபாத், ஜூன் 15–
ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த ரோஜா நடத்திய ‘ஆடுதாம் ஆந்திரா’ எனும் நிகழ்ச்சிக்கு ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டதில் நிதி மோசடி நடந்துள்ளதாகவும், இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நகரி தொகுதி எம்எல்ஏ-யாகவும், கடைசி இரண்டு ஆண்டுகள் சுற்றுலா மற்றும் விளையாட்டு, இளைஞர் நல மேம்பாட்டு துறைஅமைச்சராகும் பணியாற்றியவர் நடிகை ரோஜா.
கடந்த இரண்டு முறை நகரி தொகுதிகள் வெற்றி பெற்று எம்எல்ஏ-வான நடிகை ரோஜா, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் படு தோல்வி அடைந்தார். மேலும் அம்மாநிலத்தில் ஜெகன்மோகன் தலைமையிலான ஒஎஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது.
ராேஜா நிதி மோசடி
இந்த நிலையில், நடிகை ரோஜா அமைச்சராக இருந்தபோது, ‘ஆடுதாம் ஆந்திரா’ எனும் நிகழ்ச்சி ஆந்திரா முழுவதும் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி தோல்வி அடைந்த நிலையில், இந்த நிகழ்ச்சிக்காக, ஜெகன்மோகன் தலைமையிலான ஆந்திர அரசு ரூபாய் 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதாக தெரிவித்திருந்தது.
இந்த நிதி ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், எனவே இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும், விஜயவாடா சிபிஐ அதிகாரிகளிடம் ஆத்யா-பாத்யா அமைப்பினர் புகார் அளித்துள்ளனர்.