வாழ்வியல்

ஜூம் ஃபோன் வசதி இந்தியாவுக்கு எப்போது வரும்?

இணைய சந்திப்புகள், கூட்டங்களுக்கு உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் Zoom செயலியின் பயன்பாடு இந்த பெருந்தொற்றுக் காலத்தில் மிகப் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

ஜூம் செயலியின் எதிர்காலம், அந்நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள், Zoomல் உள்ள பாதுகாப்பு அம்சங்களை அதிகரிப்பது, இந்தியாவில் அந்நிறுவனத்தின் விரிவாக்கம் ஆகியவை குறித்து அந்நிறுவனத்தில் பிராடக்ட் & இன்ஜினியரிங் பிரிவின் தலைவர் வேல்சாமி சங்கரலிங்கம் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார்.

ஜூம் பிராடக்ட் நிறுவன இன்ஜினியரிங் பிரிவு தலைவர் வேல்சாமி

சங்கரலிங்கம் பிபிசி தமிழ் பேட்டியில் கூறியதாவது:–

Zoom செயலின் வளர்ச்சி இந்த பெருந்தொற்றுக் காலத்திற்கு முன்பாகவே Zoom பெரும் வளர்ச்சியைச் சந்தித்திருந்தது.

இந்த பெருந்தொற்றுக் காலம் அந்த வளர்ச்சியை வெகுவாக அதிகரித்தது. நாங்கள் பொதுவாக ஒரு பிராந்தியத்தில் மட்டும் எப்படி வளர்ச்சி எப்படி இருந்தது என்று பார்ப்பதில்லை. மொத்தமாகத்தான் பார்க்கிறோம். Zoomஐ பொறுத்தவரை இலவச சேவையும் உண்டு; கட்டண சேவையும் உண்டு. இதில் இலவச சேவையானது, பெருந்தொற்றுக் காலத்திற்கு முன்பும் பின்பும் சேர்ந்து 67 மடங்கு அதிகரித்துள்ளது. கட்டண சேவையைப் பொறுத்தவரை நான்கு மடங்கு அதிகரித்திருக்கிறது.

இது போன்ற செயலிகளின் பயன்பாட்டில் இந்தியச் சந்தையில் ஜூமின் பங்கு எவ்வளவு இருக்கிறது? என்று கேட்டதற்கு, இதுபோன்ற தகவல்களை நாங்கள் அளவிடுவதில்லை. ஆனால், Zoomஐப் பொறுத்தவரை இந்தியா எங்களுக்கு ஒரு மிக முக்கியமான, பெரிய சந்தை என்று அவர் சொன்னார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *