செய்திகள்

ஜி–20 அமைப்பில் புதிதாக இணையும் ஆப்பிரிக்க யூனியன்

டெல்லி, செப். 9–

ஜி20 அமைப்பில் ஆப்பிரிக்க யூனியன் நிரந்தர உறுப்பினராக இணைவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இந்தியா தலைமையேற்று நடத்தும் ஜி20 மாநாடு இன்றும், நாளையும் நடக்க உள்ள நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், 18வது உச்சி மாநாடு டெல்லியில் தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த மாநாடு காலை 10 மணிக்கு மேல் தொடங்கும் என்று அறிவித்தபடி மாநாடு தொடங்கியது. இதில் பிரதமர் மோடி உரையாற்றினார். இந்தியாவின் 60 க்கும் மேற்பட்ட நகரங்களில், 200 க்கும் மேற்பட்ட கூட்டங்கள் இதுவரையில் நடந்துள்ளன.

புதிய உறுப்பினர் சேர்ப்பு

அதன் அடிப்படையில், ஆப்பிரிக்க ஒன்றியத்தை நிரந்தர ஜி20 உறுப்பினராக்க இந்தியா முன்வந்துள்ளது. அனைத்து உறுப்பினர்களும் இந்த முன்மொழிவை ஏற்றுக்கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இந்நிலையில், ஆப்பிரிக்க ஒன்றியம் அதிகாரப்பூர்வமாக ஜி20 அமைப்பில் சேரும்போது, G21 என மறுபெயரிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிரிக்க யூனியன் (AU) 55 நாடுகளை உள்ளடக்கியது. அதனை G20-ல் அது சேர்ப்பதால் இரண்டாவது பெரிய குழுவாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *