சென்னை, ஏப். 19–
1964 –ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து தூய்மைக்கும்,
தனித்துவமான கைத்திறனுக்கும் பெயர் பெற்ற ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி மற்றும் ரத்தின நகைகளில் எண்ணற்ற தேர்வுகளை வழங்கி வருகிறது.
தென்னிந்தியா மற்றும் சிங்கப்பூரில் தரம், நம்பிக்கை மற்றும் தனக்கென வலுவான ஒரு நற்பெயரை கொண்ட ஜி.ஆர்.டி.யின் 60 ஆண்டு சிறப்பான பயணத்தில்,
கூடுவாஞ்சேரி ஷோரூம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. ஜி.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை நிறுவனம் வழங்குகிறது.
தங்க நகைகளுக்கு ஒரு கிராமுக்கு ரூ.250 குறைவாகவும், பழைய தங்கத்தை மாற்றும்போது ஒரு கிராமுக்கு ரூ.75 கூடுதலாகவும், வைரத்தின் மதிப்பில் ஒரு காரட்டுக்கு ரூ.12,500
தள்ளுபடியும் பெற்றுக் கொள்ளலாம். கூடுதலாக வெள்ளிப் பொருட்கள் மற்றும் கொலுசுகளுக்கு மேக்கிங் சார்ஜ்ஸில் 25% தள்ளுபடி, அன்கட் வைரத்தின் மதிப்பில் 10% தள்ளுபடி, வெள்ளி நகைகளுக்கு விலையில் 10% தள்ளுபடி என எண்ணற்ற சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் ஒவ்வொரு விற்பனைக்கும் சிறந்த மதிப்பையும் மகிழ்ச்சியையும் வழங்குவதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த திறப்புவிழா குறித்து பேசுகையில், ஜி.ஆர்.டி. ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜி.ஆர். ஆனந்த் அனந்தபத்மநாபன், கூறியதாவது: “மங்களகரமான சித்திரைப் பருவக் காலம் தொடங்கும் இந்த நேரத்தில், எங்கள் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயமும் ஆரம்பமாகிறது. எங்களின் இந்த புதிய ஷோரூமின் தொடக்கம் எங்களுக்கு ஒரு பெருமைக்குரிய தருணம்; இது சாத்தியமாவதற்கு – எங்கள் மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்களின் நம்பிக்கையும் ஊக்கமுமே காரணமாகும். பல தலைமுறைகளாக, காலத்தால் அழியாத நகைகளை வடிவமைப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மேலும் அந்த மரபு எப்போதும் இல்லாத அளவுக்கு வலுவாக தொடர்கிறது” என்றார்.
இது குறித்து ஜிஆர்டி ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குனர் ஜி.ஆர். ராதாகிருஷ்ணன் பேசுகையில், “எங்களின் இந்த 63–வது ஷோரூமை தொடங்கும் இந்த தங்கமான தருணத்தில், எங்கள் இதயங்கள் பெருமையாலும் மகிழ்ச்சியாலும் நிரம்பியுள்ளன. இது போன்ற எங்களது ஒவ்வொரு வளர்ச்சி பாதையும் – சிறந்த நகைகள் மற்றும் மனமார்ந்த சேவையை வழங்குவதற்கான எங்கள் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவரையும் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்கவும், எங்கள் சிறப்பு திறப்புவிழா சலுகைகளையும் அனுபவிக்க உங்களை அன்புடன் அழைக்கிறோம்” என்றார் அவர்.