செய்திகள்

ஜார்க்கண்டில் ஹவுரா – மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்து: 2 பேர் பலி

Makkal Kural Official

20க்கும் மேற்பட்டோர் காயம்

ஜார்க்கண்ட், ஜூலை 30–

ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஜ்கர்சவான் ரயில்வே நிலையம் அருகே ஹவுரா –- மும்பை விரைவு ரயில் தடம்புரண்டு 2 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஜ்கர்சவான் ரெயில் நிலையம் அருகே சரைகேலா என்ற பகுதியில் சரக்கு ரயில் தடம் புரண்டு நின்று கொண்டு இருந்தது. அதிகாலை 3:43 மணியளவில் ஹவுரா – மும்பை ரெயில் (ரயில் எண்: 12810) ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஜ்கர்சவான் ரயில் நிலையத்தை கடந்து சென்றபோது தடம் புரண்ட சரக்கு ரயிலின் பக்கவாட்டில் மோதியது. இதில் ஹவுரா ரெயிலின் 12 ரயில் பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் மாநில பேரிடர் மீட்புக் குழு மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த மாநில பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்புத் துறையினர் ரயிலில் ஈடுபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்டு வருகிறனர். சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டுவர்களுக்கு நிகழ்விடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சை தேவைப்படுவர்களுக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த விபத்து காரணமாக இந்த மார்க்கத்தில் செல்லும் ஹவுரா -– இஸ்பாட் எக்ஸ்பிரஸ் ரயில் (22861), காரக்பூர் – தன்பாத் எக்ஸ்பிரஸ், ஹவுரா – பார்பில் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சவுத் பிஹார் எக்ஸ்பிரஸ் (13288) மாற்றுப் பாதையில் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அசன்சோல் டாடா மெமும் சிறப்பு ரயில் (08173) ஆத்ரா வரை மட்டுமே செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹெல்ப் எண்கள்

ஹெல்ப்லைன் எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன:

ஜிஎஸ்எம்டி –- 022-22694040, தாதர் –- 9136452387, கல்யாண் –- 8356848078, தானே –- 9321336747, டாடாநகர்: 06572290324, சக்ரதர்பூர்: 06587 238072, ரூர்கேலா: 06612501072/ 06612500244, ஹவுரா: 9433357920/ 03326382217, ஜர்சுகுடா: 06645-272530.

முன்னதாக கடந்த 19 ஆம் தேதி சண்டிகரில் இருந்து அசாம் மாநிலத்தின் திப்ருகர் நகர் வரை செல்லும் சண்டிகர் – திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி கோச்சின் 8 பெட்டிகள், உத்தரப் பிரதேசத்தின் ஜுலாஹி ரயில் நிலையத்துக்கு சில கிலோ மீட்டர் தொலைவுக்கு முன்பு உள்ள பிகவுரா என்ற இடத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதே போல் சில நாட்களுக்குப் பிறகு, லக்னோவில் இருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் அம்ரோஹா ரயில் நிலையம் அருகே தடம் புரண்டதால், டெல்லி-லக்னோ ரயில் பாதையில் இடையூறு ஏற்பட்டது. எனினும், உயிர் சேதமோ, காயமோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *