செய்திகள்

ஜார்க்கண்டில் பஸ் பாலத்தில் மோதி விபத்து : 8 பேர் பலி

ராஞ்சி, செப். 18–

ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில் நேற்று சுமார் 50 பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் பாலத்தில் இருந்து தவறி விழுந்ததில் 8 பேர் பலியானார்கள், 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் மனோஜ் ரத்தன் சோத்தே கூறியதாவது:

கிரிதி மாவட்டத்தில் இருந்து ராஞ்சி நோக்கிச் சென்ற பஸ், தடிஜாரியா காவல் நிலையப் பகுதியில் உள்ள சிவன்னே ஆற்றில் ஒரு பாலத்தின் தடுப்புப் பகுதியை உடைத்துக்கொண்டு கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில், 2 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும், 6 பேர் ஹசாரிபாக்கில் உள்ள சதர் மருத்துவமனையில் இறந்தனர். இன்னும் சில பயணிகள் பஸ்சில் சிக்கியிருப்பதால் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றார். பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி வரும் அவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிப்பதற்காக ராஞ்சியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அவர்களை அனுப்புவதற்கான பணிகளுக்கு தயாராகி வருகிறோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பிரதமர் இரங்கல்

ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில் நடந்த பஸ் விபத்தில் உயிர் இழந்தவர்கள் குறித்து மிகுந்த வேதனை அடைந்துள்ளேன். இந்த துயரமான நேரத்தில் எனது எண்ணங்கள் உயிரிழந்த குடும்பத்தினருடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

முதல்வர் சிபுசோரன்

இறந்தவர்களின் ஆன்மாக்கள் இறைவனில் நிழலில் இளைப்பாறட்டும், அவர்களின் குடும்பத்தினருக்கு துயரத்தை தாங்கும் சக்தியையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.

மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என முதல்வர் சிபுசோரன் தெரிவித்துள்ளார்.

அம்மாநில சுகாதார அமைச்சர் பன்னா குப்தாவும் தனது டுவிட்டரில், காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு சிவில் சர்ஜன் ஹசாரிபாக்கிற்கு உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில், விபத்தில் உயிர் பிழைத்த பரம்ஜித் கவுர் கூறுகையில், “சாலை நன்றாக இருந்தது. திடீரென பஸ் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published.