ஜான்சியில் உள்ள மகாராணி லட்சுமிபாய் மருத்துவமனை நியோநேட்டல் இன்டென்சிவ் கேர் யூனிட் (NICU) வில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் பத்து பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது, ஒரு நாளில் இந்த பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட கோர முடிவு தாய்மார்களுக்கும், குடும்பத்தாருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி கதறி அழ வைத்துள்ளது.
18 படுக்கைகள் கொண்டு உருவாக்கப்பட்டிருந்த இந்த பிரசவ வார்டில் , சம்பவத்தின் போது 49 குழந்தைகளைக் கொண்டிருந்தது. இரவு 10:40 மணியளவில் திடீரென தீ வெடித்தது, மின்னல் வேகத்தில் பரவிய தீ முழு வார்டையும் விழுங்கியது. இந்த சம்பவம் நேரில் கண்ட பலரின் மனதை உலுக்கியது, உறவினர்கள் அழுதுக்கொண்டு தங்கள் உடமைகளையும் உற்றார் உறவினர்களையும் தேடிக்கொண்டிருந்த காட்சி அந்த நகரையே மீளா சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் துணை முதல்வர் பிரஜேஷ் பாதக், சம்பவ இடத்துக்கு நடு இரவே நிலமையை நேரில் கண்டு அதிர்ந்தார், பலருக்கு ஆறுதலும் சொல்லிய வண்ணம் கண்ணீர்ரை கட்டுப்படுத்த முடியாது தினறி கொண்டே நடவடிக்கைகளை துரிதப்படுத்தினார்.
உயிரிழந்த ஏழு குழந்தைகளின் உடல்கள் உடனேஅடையாளம் காணப்பட்டது, பிற மூன்று உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் ஊடகங்களுக்கு விவரித்தார்.
“ இந்த ஆண்டின் துவகத்தில், பிப்ரவரி மாதத்தில் தான் தீ பாதுகாப்பு ஆய்வுகள் நடைபெற்றது, ஜூன் மாதத்தில் ஒரு மாக் டிரில் , அதாவது ஓத்திகை பயிற்சியும், நடத்தப்பட்டள்ளது. அப்படி இருந்தும், இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்பதற்கான முழு தகவல் விசாரணை முடிந்த பிறகு மட்டுமே கூற முடியும், என்றார் . பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவிகள் உடனடியாக வழங்கப்படும்,” என்று அவர் உறுதியளித்தார்.
சம்பவத்தை பார்த்தவர்கள் இந்த தீ விபத்து மின்னல் வேகத்தில் சில நிமிடங்களுக்குள் மொத்த வார்டையும் ஆட்கொண்டது. தீ பரவனுடன் அனலும் சூழல இருந்ததால் உடனடியாக காவல்துறையினரும் ராணுவத்தினரும் உடனே உள்ளே செல்ல முடியாது தவித்தாக கூறினார்கள்.
இந்த மோசமான நிகழ்வு மருத்துவமனையின் பாதுகாப்பு வசதிகளில் உள்ள குறைகளை வெளிக்கொணர்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்கள் துயர கதறல் மருத்துவமனையில் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது.
தீவிபத்துக்கான காரணம் மற்றும் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாது இருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.