செய்திகள்

ஜாதி – மதம் பெயரைச் சொல்லி ஓட்டு கேட்கும் வேட்பாளர்கள் மீது நடவடிக்கை: தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் வலியுறுத்தல்

புதுடெல்லி, ஏப்.15–

ஜாதி மதங்களை முன் வைத்து ஆதாயம் தேடும் வேட்பாளர்கள் மீது நடவடிக்கை தேவை என தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தி உள்ளது.

சமூக வலைதளத்தில் அதிக மத அளவிலான பிரசாரத்தை தடுக்க கோரி சுக்கானி என்பவர் தொடர்ந்த வழக்கில் ஜாதி, மதங்களை முன் வைத்து ஆதாயம் தேடும் வேட்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை என தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. மேலும் வேட்பாளர்களை தீவிரமாக கண்காணிக்கவும் அறிவுரை வழங்கி உள்ளது.

தேர்தல் கமிஷனின் நிலை என்ன என்பதை நாளை கோர்ட்டுக்கு ஒரு பிரதிநிதியை அனுப்பி விளக்கம் தரவும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

‘‘தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுகிறார்கள். நீங்கள் அதைப் பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள்? ஒருவர் ஒன்றைச் செய்கிறார் என்றால் அதை அவர் விதிமுறைகளை மீறி செய்வதா? அதை தேர்தல் கமிஷன் அனுமதிக்கக் கூடாது’ என்று தலைமை நீதிபதி காட்டமாகக் கூறினார்.

தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவும் நோட்டீஸ் அனுப்பவுமே அதிகாரம் உள்ளது. அவர்களை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் இல்லை என தேர்தல் ஆணையம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *