செய்திகள்

ஜவுளி, பர்னிச்சர், கைவினை பொருள் வடிவமைப்பு: லெக்சஸ் டிசைன் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை, ஆக. 12–

ஜவுளி, பர்னிச்சர், கைவினைப் பொருட்கள், மக்கள் வாழ்க்கை முறை பொருட்களுக்கு வடிவமைப்புக்கு புதிய லெக்சஸ் டிசைன் விருதுகளுக்கு பொது மக்கள் மற்றும் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைனில் வரவேற்கப்படுகின்றது. இதில் வெற்றி பெற்றவர் விவரம் அடுத்த (2021)ம் ஆண்டில் ஆன்லைனில் அறிவிக்கப்படும். இதற்கு நுழைவு கட்டணம் கிடையாது. ஒவ்வொருவரும் 5 படைப்பு வரை அனுப்பலாம். அக்டோபர் மாதம் 6–ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று லெக்சஸ் கார் இந்தியா நிறுவன தலைவர் பி.பி.வேணுகோபால் தெரிவித்தார்.

4வது ஆண்டாக இந்த விருது வழங்கப்படுகிறது. ஆன்லைனில் டிஜிட்டல் விழாவாக இது நடைபெறும். இதில் டிசைன் வல்லுனர்கள், மாணவ, மாணவிகள், பொது மக்கள் இந்த போட்டியில் பங்கேற்ற உள்ளனர். இதற்கான டிசைனர்கள் புதுமை, கவர்ச்சி, எதிர்காலத்துக்கான டிசைனாக இருக்க வேண்டும் என்றார் அவர்.

10 பிரிவுகளில் நடைபெறும் போட்டிக்கு இந்த டிசைனுக்கு வழிகாட்டிகள் உதவி டிசைன்களை வடிவமைக்க உதவுவர். லெக்சஸ் சர்வதேச டிசைன் விருதுக்கு, இந்த டிசைனில் வெற்றி பெற்றவரின் டிசைன் அனுப்பப்படும். சர்வதேச இத்தாலி மிலன் டிசைன் போட்டி நடைபெறும் நிகழ்ச்சியில் வெற்றியாளர் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என்றார் பி.பி.வேணுகோபால்.

லெக்சஸ் கார் நிறுவனம் இந்தியாவில் கடந்த 2017ம் ஆண்டு முதல் அறிமுகமாகி வரவேற்பை பெற்றுள்ளது. சொகுசு கார்களை இது தயாரிக்கிறது.

இது டிசைன் விருதுகளுக்கு ஆண்டுதோறும் போட்டி நடத்துகிறது.

இது பற்றி அறிய www.lexusindia.co.in வலைதளத்தை பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *