ஸ்ரீநகர், நவ. 2
ஜம்மு காஷ்மீரின் கோடைகால தலைநகரான கான்யாரில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே இன்று காலை துப்பாக்கி சூடு நடைபெற்றது.
இது குறித்து அதிகாரிகள் கூறும் போது, “கான்யார் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் இன்று காலை அங்கு சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர், தங்கள் மீதான தாக்குதலுக்கு பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தனர். அதனைத் தொடந்து அங்கு துப்பாக்கிச் சண்டை நடந்தது.
அப்பகுதியில் துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏன்றாலும் இரு தரப்பு பகுதிகளிலும் உயிர்ச் தேசம் குறித்து எந்த வித தகவலும் இல்லை” என்று தெரிவித்தனர்.
புத்கம் மாவட்டத்தில் நீர்வளத்துறையில் தினக்கூலியாக வேலை செய்து வருபவர்கள் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஷோபியான், உஸ்மான் மாலிக். இந்த நிலையில், இந்த இருவர் மீது தீவிரவாதிகள் நேற்று துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது தொடர்பாக தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை தேடி வருகின்றனர்.
12 நாட்களுக்கு முன்பு இசட் மோர் சுரங்கப்பாதை கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், டாக்டர் உள்பட 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தீவிரவாதிகள் நடத்தும் 6வது தாக்குதல் இதுவாகும். புலம்பெயர் தொழிலாளர்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதால், ஜம்மு காஷ்மீரில் பணியாற்றும் சக தொழிலாளர்கள் பீதியில் உள்ளனர்.