செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 5 மாதத்திற்கு பின் மீண்டும் இணையதள சேவை

ஸ்ரீநகர், ஜன. 15–

ஜம்மு காஷ்மீரில் 5 மாதத்திற்கு பின் பிராட்பேண்ட் இணையதள சேவை அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் முழுமையாக எல்லோருக்கும் இந்த தடை நீக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீக்கியது. ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கத்தை தொடர்ந்து அங்கு மிகவும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இன்னும் காஷ்மீர் ராணுவ கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அப்போது தொடங்கிய பிரச்சனை இன்னும் முடியவில்லை. அங்கு 144 அறிவிக்கப்பட்டது, அதோடு மாநிலம் முழுக்க நிறைய தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. மேலும் உமர் அப்துல்லா உட்பட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இணைய பயன்பாட்டுக்கு தடை, செல்போன் சேவைகள் துண்டிப்பு, ஊரடங்கு உத்தரவுகள் ஆகியவையும் அமல்படுத்தப்பட்டன. மத்திய அரசின் இந்த செயல் தொடர்ந்து விமர்சனத்தை சந்தித்து வருகிறது.

இத்தடைகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட பலரும் வழக்குகள் தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த விசாரணையின் போது, ஜம்மு காஷ்மீரில் மீண்டும் இணைய சேவையை தொடங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும், 144 தடை உத்தரவிற்கு கீழ் அரசு பிறப்பித்த உத்தரவுகளை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. இணையத்தில் கருத்து கூறுவது மனிதனின் அடிப்படை உரிமை. கருத்துரிமை என்பது சட்டப்பிரிவு 14க்கு கீழ் வருகிறது. முதலில் காஷ்மீரில் சூழல் எப்படி என்று ஆராய்ச்சி செய்ய வேண்டும்.எந்த வழியும் இல்லை என்றால் மட்டும்தான் இதை தடுக்கலாம் என்று கூறினார். நீதிபதிகள் என்.வி. ரமணா, ஆர். சுபாஷ் ரெட்டி, பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்தது. இந்த நிலையில் முதல் கட்டமாக தற்போது ஜம்மு காஷ்மீரில் பிராட்பேண்ட் இணையதள சேவை அனுமதிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *