ஸ்ரீநகர், மே 14–
ஜம்மு காஷ்மீரில் 4 மாவட்ட பள்ளிகளுக்கு எவ்வித முன் அறிவிப்பும் இன்றி திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பயங்கரவாதிகளை ஒடுக்க ஆபரேஷன் சிந்தூர் என்ற அதிரடி நடவடிக்கையை இந்தியா கையில் எடுத்தது. தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இந்திய நிலைகளை நோக்கி பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்தது.
இதனிடையே இந்தியா–பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு, எல்லையில் அமைதி நிலவுகிறது. இதையடுத்து, ஜம்முவின் எல்லை அல்லாத மாவட்டங்களில் கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டன.
இந்த நிலையில் ஜம்மு, ரஜௌரி, பூஞ்ச் மற்றும் சம்பா ஆகிய மாவட்டங்களில் செயல்படும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று இயங்காது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக இந்த விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் உதம்பூர் மாவட்டம், பனி, பாஷோலி, மகன்பூர். பட்டு, மல்ஹார் மற்றும் கதுவா மாவட்டத்ததில் உள்ள பில்லாவார் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள் இன்று இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.