செய்திகள்

ஜம்மு – காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் கைது

சிறீநகர், மார்ச் 8–

தடைசெய்யப்பட்ட லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 2 பேரை பாரமுல்லா போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

இதுகுறித்து ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளதாவது: –

பாரமுல்லா மாவட்டத்தின் குன்சர் கிராமப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, அப்பகுதிக்கு போலீசார் விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, தடை செய்யப்பட்ட பயங்கவாத அமைப்பான லஷ்கர்-ஏ-தொய்பாவைச் (டிஆர்எஃப்) சேர்ந்த குர்ஷித் அகமது கான் மற்றும் ரியாஸ் அகமது கான் ஆகியோரை கைது செய்தனர்.

துப்பாக்கிகள் பறிமுதல்

மேலும், அவர்களிடம் இருந்து 2 ஏகே 47 ரக துப்பாக்கிகள், அதில் பயன்படுத்தப்படும் 15 தோட்டாக்கள், 20 லஷ்கர் பயங்கரவாத அமைப்பின் சுவரொட்டிகள் மற்றும் பிற பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், அவர்கள் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-ஏ-தொய்பா (டிஆர்எஃப்) கூட்டாளிகளாக செயல்படுவது தெரிய வந்தது. இதுதொடர்பாக அவர்கள் மீது குன்சர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என பாரமுல்லா போலீசார் தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *