செய்திகள்

ஜம்மு – காஷ்மீரில் வெடிமருந்துகளுடன் பறந்த ட்ரோன்

பாதுகாப்புப் படை சுட்டு வீழ்த்தினர்

ஸ்ரீநகர், ஜூலை.23–

ஜம்மு – காஷ்மீரில் இந்திய எல்லையில் 5 கிரோ எடையுள்ள வெடிபொருட்களுடன் பறந்துவந்த ட்ரோனை பாதுகாப்புப்படையினர் சுட்டுவீழ்த்தினர்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள விமானப்படை தளத்தில் கடந்த மாதம் 27-ந் தேதி பயங்கரவாதிகள் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தினர். இதில் 2 விமானப்படை வீரர்கள் காயமடைந்தனர். இதையடுத்து நாடு முழுவதும் உள்ள விமானப்படை மற்றும் கடற்படைத்தளங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் உள்ள கனச்சக் என்ற பகுதியில், எல்லையில் 6 கி.மீ. உள்ளே சந்தேகத்திற்குரிய வகையில் பறந்து கொண்டிருந்த ட்ரோன் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், அந்த ட்ரோனில் இருந்து ஆபத்தான 5 கிலோ வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் ஜம்மு காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விரைவில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜம்மு மற்றும் இந்தியாவின் எந்த ஒரு பகுதியிலும் விமான தளங்களில் பயங்கரவாதிகளின் ஊடுருவல், தாக்குதல் இல்லாமல் இருக்க விமானப்படை அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஜம்மு – காஷ்மீர் இந்திய எல்லையில் பயங்கரவாதிகளின் ட்ரோன் பறப்பது அதிகரித்து வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *