ஸ்ரீநகர், டிச. 20–
ஜம்மு-காஷ்மீரில் இன்று அதிகாலையில் 3 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இன்று அதிகாலையில் நடந்த இந்த என்கவுன்டரில், கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என ஜம்மு-காஷ்மீர் காவல்துறை அடையாளம் கண்டுள்ளது.
துப்பாக்கிகள் பறிமுதல்
காஷ்மீர் பகுதியில் உள்ள ஷோபியான் மாவட்டத்தில் உள்ள முன்ஜ் மார்க் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே இந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, பயங்கரவாதிகளிடம் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கி ஒன்றும், இரண்டு கைத்துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டதாக காஷ்மீர் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குனர் தெரிவித்துள்ளார்.