செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் அதிகாலையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர், ஜூன் 7–

ஜம்மு-காஷ்மீரின், குப்வாரா மாவட்டத்தில் இன்று அதிகாலையில், 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

இதுகுறித்து ஜம்மு–காஷ்மீர் போலீசார் கூறியதாவது:–

குப்வாரா மாவட்டத்தின் சக்தாரஸ் கண்டி பகுதியில் இன்று அதிகாலை பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்தச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் பெயர் டுஃபெயில் என்பதும் அவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்பதும் தெரயிவந்துள்ளது.

தேடுதல் வேட்டை

துப்பாக்கிச் சண்டை நடைபெற்ற பகுதியில் வேறு யாரேனும் பயங்கரவாதிகள் இருக்கிறார்களா என்று பாதுகாப்புப் படை வீரர்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் என்று போலீசார் தெரிவித்தனர். முன்னதாக, பாரமுல்லா மாவட்டத்தின் சோபோர் நகரில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி கடந்த சில தினங்களுக்கு முன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதியை அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். கடந்த சில வாரங்களாக காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பொதுமக்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றனர். கடந்த வாரம், குல்காம் மாவட்டத்தில் வங்கி மேலாளரையும், பள்ளி ஆசிரியரையும் சுட்டுக் கொன்றனர். இதனால், காஷ்மீரில் பதற்றம் நிலவுகிறது.

Leave a Reply

Your email address will not be published.