செய்திகள்

ஜப்பான், இத்தாலி நாட்டு நிறுவனங்கள் கூட்டுடன் டிராக்டர் ஏற்றுமதியில் சோனாலிகா முதலிடம்

Spread the love

சென்னை, ஆக. 24

இந்தியாவில் மிக வேகமாக ஏற்றுமதி வளர்ச்சியை கண்டு வரும் டிராக்டர் பிராண்டுகளில் இண்டர்நேஷனல் டிராக்டர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளான சோனாலிகா மற்றும் சோலிஸ் வகை டிராக்டர்களின் ஏற்றுமதி தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்து சாதனை படைத்து வருகின்றன. கடந்த ஜூலை மாதத்திலும் இந்நிறுவனத்தின் டிராக்டர்கள் ஏற்றுமதி 108% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

இது குறித்து ஐ.டி.எல். குழுமத்தின் நிர்வாக இயக்குநர் தீபக் மிட்டல் கூறுகையில், “டிராக்டர் ஏற்றுமதியில் எங்கள் நிறுவனம் முந்தைய சாதனைகளை முறியடிக்கும் வகையில் 3 இலக்க வளர்ச்சியை எட்டி சாதனை புரிந்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் 906 டிராக்டர்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டிருந்த நிலையில், நடப்பாண்டு ஜூலையில் அவற்றின் ஏற்றுமதி 1861–-ஐ எட்டி மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. இது, கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 108 % வளர்ச்சியாகும்.

இதையடுத்து நடப்பாண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான 4 மாத காலத்தில் மட்டும் 5,155 டிராக்டர்களை ஐ.டி.எல். ஏற்றுமதி செய்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

வேளாண் துறைக்கு ஏற்ற வகையில் டிராக்டர்களை வடிவமைப்பதில் நிறுவனம் காட்டி வரும் அக்கறையின் காரணமாகவே தற்போது உலகளவில் வேகமாக வளர்ச்சி கண்டு வரும் பிராண்டாக ஐ.டி.எல். மாறியுள்ளது. ஜப்பானின் யான்மார், இத்தாலியின் அர்கோ போன்ற சர்வதேச பிராண்டுகளுடன் பங்குதாரர்களாக இணைந்து செயல்படுவது நிறுவனத்தின் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

குறிப்பாக, ஐரோப்பா, அமெரிக்கா, சார்க் சந்தைகளில் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி சூடுபிடிப்பதற்கு இந்த இணைவு மிகப்பெரிய ஆதரவினை நல்கியுள்ளது. அமெரிக்க சந்தையில் நுழைந்தது, நேபாளம், வங்கதேசம், ஐரோப்பிய கண்டத்தில் ஐ.டி.எல். நிறுவனத்தின் புதிய வகை தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியது போன்றவை மைல்கல் சாதனையாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *