செய்திகள்

ஜப்பானில் 5.6 ரிக்டர் அளவுகோலில் பயங்கர நிலநடுக்கம்

டோக்கியோ, ஜூன் 4–

ஜப்பான் நாட்டின் ஒகினாவா மாகாணம் நகாவில் 5.6 ரிக்டர் அளவுகோலில்

பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஜப்பானின் ஒகினாவா மாகாணத்தின் தலைநகர் நகாவில் நேற்று மாலை 4 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 26.79 டிகிரி வடக்கு அட்சரேகைக்கும் 126.41 டிகிரி கிழக்கு தீர்க்கரேகைக்கும் இடையில் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள், உயிரிழப்புகள் மற்றும் சேத விவரங்கள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் வரவில்லை.

Leave a Reply

Your email address will not be published.