டோக்கியோ, ஏப்.7–
ஜப்பானில் ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் கடலில் விழுந்து நொறுங்கியதில், டாக்டர், நோயாளி உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
நேற்று நாகசாகி மாகாணத்தில் உள்ள விமான நிலையத்திலிருந்து புகுவோகாவில் உள்ள மருத்துவமனைக்கு ஒரு வயதான நோயாளியை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதைத்தொடர்ந்து இரண்டு கடலோர காவல்படை விமானங்கள் மற்றும் மூன்று ரோந்து கப்பல்கள் மூலம் தேடுதல் பணி நடைபெற்று வந்தது.
இந்நிலையில் உயிரிழந்த டாக்டர் கேய் அரகாவா (வயது 34), நோயாளி நோயாளி மித்சுக்கி மொடொஇசி (வயது 86) மற்றும் பராமரிப்பாளர் கஸுயோஷி மொடொஇசி (வயது 68) ஆகியோர் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் பைலட் ஹிரோஷி ஹமடா (வயது 66), என்ஜினியர் கஸுடோ யோஷிடேக், செவிலியர் நர்ஸ் சகுரா குனிடாகே (வயது 28) ஆகியோர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
இந்த 3 பேரும் நீரில் உயிர்காக்கும் கருவிகளை வைத்திருந்த நிலையில் கரையோர காவல்துறையினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.