செய்திகள்

ஜப்பானின் வடகிழக்கு கடற்கரை பகுதிகளில் பயங்கர நிலநடுக்கம்

ரிக்டர் அளவுகோலில் 6.6ஆக பதிவானது

டோக்கியோ, மே 1–

ஜப்பானின் வடகிழக்கு கடற்கரைப் பகுதிகளில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.6ஆக பதிவாகி உள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஜப்பான் வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:–

ஜப்பானின் வடகிழக்கு கடற்கரைப் பகுதிகளில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.7 அலகுகளாகப் பதிவானது.

இந்த நிலநடுக்கம் பசிபிக் பெருங்கடலில் 60 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது என்று அந்த மையம் தெரிவித்துள்ளது.

டோக்கியோ உள்பட நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுவிக்கப்படவில்லை.

அப்படியிருந்தும், நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பிரதமர் அலுவலகம் நெருக்கடிக் கால உதவி மையத்தை அமைத்து உள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரெயில்வே நிறுவனங்கள் ரெயில் போக்குவரத்து சேவையை நிறுத்தியுள்ளது. நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள அணுமின் நிலையங்களில் சோதனைக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *