செய்திகள்

ஜனவரி 5-ந்தேதி 2,553 மருத்துவ காலி பணியிடங்களுக்கான தேர்வு

Makkal Kural Official

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை, நவ. 29–

ஜனவரி 5-ந்தேதி 2,553 மருத்துவ காலி பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி மருத்துவர் காலி பணியிடங்களுக்கான தேர்வினை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டுள்ளோம். ஆன்லைனில் தேர்வு ஜனவரி 27 ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது இந்நிலையில் முன்கூட்டியே ஜனவரி 5ம் தேதி தேர்வு 2553 மருத்துவர்களுக்கான தேர்வு நடைபெறும். தேர்ச்சி பெற்றவர்களை தேர்வு செய்ய கூடுதல் பணியாளர்களை எம்.ஆர்.பிக்கு கொடுத்து விரைவாக நிரப்படும்.

நிலுவையில் இருந்த வழக்குகள் தீர்வு காணப்பட்டு மருத்துவ துறையில் ஒரு வார காலத்தின் 428 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் உதவி பேராசிரியர்களாக இருந்த 296 பேருக்கு இணை பேராசிரியராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.இணை பேராசிரியராக இருந்த 110 பேருக்கு பேராசிரியர் பதவியும், இணை இயக்குனர்களாக இருந்த 4 பேருக்கு கூடுதல் இயக்குனர்களாக பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் நீண்ட நாட்களாக பணியாற்றிய தொகுப்பூதிய செவிலியர்கள் 1200 பேர் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல கொரோனா காலத்தில் பணியாற்றிய 940 பேருக்கு தொக்குப்பூதிய அடிப்படையில் இணைகிறார்கள். பின்னர் சிறிது காலத்தில் நிரந்தர பணியில் இணைவார்கள். இவர்களுக்கு இன்று டி.எம்.எஸ் வளாகத்தில் கலந்தாய்வு நடைபெறுகிறது. மொத்தம் 2140 செவிலியர்களுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி 2ம் தேதி கிண்டி மருத்துவ பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது.

மழை பெய்த போது முன்னர் நீர் தேங்கிய மருத்துவமனைகளில் தற்பொழுது பாதிப்பில்லாத வகையில் கட்டமைப்பு மாற்றப்பட்டுள்ளது. பருவமழை சிறப்பு முகாம்கள் மூலம் ஒன்றரை மாதத்தில் 49,326 நடத்தப்பட்டுள்ளது. இதில் 2 லட்சத்து 68 ஆயிரம் பேர் பயன்பெற்றுள்ளனர்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன் நலமுடன் உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம், மருத்துவக் கல்வி இயக்குநர் சங்குமணி,டிஎம்எஸ். இயக்குநர் ராஜமுர்த்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *