செய்திகள்

ஜனவரி மாதத்தில் 84.63 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரெயில்களில் பயணம்

சென்னை, பிப்.1–

சென்னை மெட்ரோ ரெயில் ரெயிலில் கடந்த டிசம்பர் மாதத்தை விட ஜனவரி மாதத்தில் 5 லட்சத்து 28 ஆயிரத்து 914 பயணிகள் அதிகமாக பயணித்துள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி 1–ந்தேதி முதல் 31–ந்தேதி வரை மொத்தம் 84 லட்சத்து 63 ஆயிரத்து 384 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக கடந்த 12 அன்று 3 லட்சத்து 64 ஆயிரத்து 521 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

ஜனவரி மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 37 லட்சத்து 43 ஆயிரத்து 885 பயணிகள், பயண அட்டைகளை பயன்படுத்தி 37 லட்சத்து 92 ஆயிரத்து 912 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 15,456 பயணிகள், குழு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 8,792 பயணிகள் மற்றும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 9 லட்சத்து 2,336 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *