செய்திகள்

‘ஜனநாயகன்’ என பெயரிடப்பட்டுள்ள நடிகர் விஜய்யின் தளபதி 69

Makkal Kural Official

பர்ஸ்ட் லுக் வெளியீடு

சென்னை, ஜன. 26–

நடிகர் விஜய்யின் கடைசி படத்திற்கு ‘ஜனநாயகன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இது அரசியல் கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது போஸ்டரிலேயே தெரிகிறது.

எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் அவரது 69வது படத்தை கடைசி படமாக அறிவித்து நடித்து வருகிறார். பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கவுதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், வரலட்சுமி, டிஜே அருணாசலம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை கே.வி.என் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக பல கட்டமாக சென்னையில் அமைக்கப்பட்ட அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று காலை இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ‛ஜனநாயகன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டரில், தொண்டர்கள் முன்பாக நடிகர் விஜய் வேனில் ஏறி ‛செல்பி’ எடுப்பது போன்று படம் இடம்பெற்றுள்ளது.

அரசியல் கட்சி துவக்கியுள்ள விஜய்யின் கடைசி படம் என்பதால், இது அரசியல் கதையாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ள நிலையில், இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டர் அதனை உறுதிப்படுத்தியுள்ளது.

#Thalapathy69

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *