சிறுகதை

ஜனநாயகக் கடமை… ராஜா செல்லமுத்து

தேர்தலுக்குப் போக முடியாமல், தவியாய்த் தவித்துக் கொண்டிருந்த சக்தியும் பிரபாகரனும் ஒரு நிலையில் இல்லாமல் பேசிக் கொண்டும் அங்குமிங்கும் நடந்து கொண்டும் இருந்தனர்.
யாரிடம் உதவி கேட்காமல் சுயமரியாதையோடு வாழும் சினிமா உதவி இயக்குனர்கள்.
“ச்சே ….நம்மோட ஜனநாயக கடமைய நிறைவேத்த முடியாம போயிருச்சு.. இதுக்கு நான் ரொம்பவே வருத்தப்படுகிறேன்.
ஊருக்கு போயி ஓட்டு போட முடியாம போனதுக்கு, நான் நெறையவே அவமானப்படுறேன். இந்த மாதிரியான நிலைமை யாருக்கும் வரக்கூடாதுன்னு பிரார்த்தனை பண்றேன் என்று சக்தி சொல்ல பிரபாகரனும் அதையே சரியென்று தலையாட்டினான்.
நாம எதையோ பிடிக்க வந்து இப்ப எப்படியோ இருக்கோம்ல படிச்ச படிப்புக்கு வேலையில்ல.
பாத்த வேலையில சம்பளம் வரல இந்த ஜனநாயகம் நம்மள ரொம்பவே மொடக்கி வச்சிருக்கு. நிலையில்லாத இந்த வாழ்க்கையில, நிலையில்லாத வருமானத்தில, ஊருக்கு போயி நம்ம ஜனநாயக கடமைய நிறைவேத்த முடியாம போனதுக்கு நாம வெக்கப்படுறத விட இந்த ஜனநாயக நாடு தான் ரொம்பவே வெட்கம் வேதனைப் படனும் என்ற பிரபாரகனை ஆதரவாய் தொட்டான் சக்தி.
நம்ம ஜெயக்குமார் ஊருக்கு போனானா?
“இல்ல”
“முருகேசன்”
” ம்ஹூகும்”
“ஜெய்”
“இல்லை” என்று தலையாட்டினான் சக்தி
“ஆனந்தாவது போனானா?”
“இல்ல”
அடப்பாவிங்களா? இவங்க எல்லாம் போகலியா ?
“ஆமா”
“நீ சொன்னா எல்லாருமே பாவப்பட்ட அசிஸ்டென்ட் டைரக்டர்ஸ் இல்ல.
“ம்ம” ஜனநாயக நாட்டில, படைப்பாளிகள் படுறபாடப் பாத்தீங்களா? எல்லாம் பொருளாதாரத்தில பின் தங்கியிருக்கானுக.
இதுக்கெல்லாம் யாரும் காரணமின்னு நினைக்கிற சக்தி ”
“நாமதான்” என்ற பிரபாகரனை ஒரு மாதிரியாகப் பார்த்தான், சக்தி “எப்படி சொல்ற?
“நம்மகிட்ட இருக்கிற இயலாமை”
“இயலாமையா?”
“ஆமா”
“சுயமரியாதை, ஒழுக்கம், யார்கிட்டயும் உதவி கேக்கக் கூடாதுங்கிற ஒரு தில்லு, இது தான் நாம இத்தன பேரையும் ஓட்டுப் போட விடாம பண்ணியிருக்கு”.
“அப்பிடியா?”
“ஆமா சக்தி”
அரசியல், சினிமாவுல இருக்கிறவங்க எல்லாம் ஒரு மாதிரியாக இருப்பானுக
“ஆனா, நாம தான் இந்த கட்டுப்பாட்டு கோட்ட தாண்டாம ரொம்பவே ஒழுக்கமா இருக்கோம். அதனால தான் ஊருக்கு போக முடியாம, நம்மோட ஜனநாயக கடமை செய்ய முடியாம தவிர்க்கிறோம் என்ற பிரபாகரனின் பேச்சுக்கு மறுபேச்சுப் பேசாமல், நாமெல்லாம் ஒண்ணு சேர்ந்து இது பத்திப் பேசுவோமா? என்ற சத்தியம் பேச்சுக்கு பிரபாகரன் “சரி” எகத் தலையாட்டினான்.
எங்க மீட் பண்ணலாம்?
“நம்ம வீட்டுக்கு பக்கத்துல இருக்கிற பார்க்கில ”
“ஓ ….. அங்கயே மீட் பண்ணலாமே”
என்ற இருவரும் நண்பர்களுக்கு போன் செய்து தகவல் சொல்லிவிட்டு பூங்காவிற்குச் சென்றனர்.
“என்ன சக்தி, பூங்கா பூராம் காலியா இருக்கு!
“எல்லாம் எலெக்சன் லீவுக்கு போயிருப்பாங்க போல”
“ம்” ஆனா நம்மோட உரிமைய நம்மால நிறை வேத்த முடியலையே!
“ம்” எல்லாம் நம்மோட வறுமை” இதுக்கு ஒரு நல்ல முடிவு கட்டணும். அடுத்த எலக்சன்ல நம்மோட ஓட்டு கண்டிப்பா பதிவாகணும். நம்ம ஊரிமைய சரியான நிறைவேத்தனும்” என்று இரண்டு பேரும் பேசிக் கொண்டிருக்கும்போது நண்பர்கள் எல்லாம் பூங்காவில் ஒன்றுகூடி கூறினார்கள்.
என்ன ஆனந்தா? உங்களுக்கு இது “கஷ்டமா இல்லையா ?
“இருக்கு, என்ன பண்ண, நம்மோட நிலைமை அப்படி
“இதுக்கு நாம ரொம்பவே வெட்கப்படனும் ஆனந்த்
“ஆமா…. அடுத்த எலக்சன்ல நம்மோட பங்களிப்பு கண்டிப்பா பெருசா இருக்கணும் என்று பிரபாகரன்
“ஆமா… ஆனந்த் நம்மால நாட்டத் தீர்மானிக்கிற மனுஷங்கள, நாட்ட நேர்வழிப்படுத்த திரைக்கதையை திரைப்படத்த எழுத முடியுது . வசனங்கள வடிக்க முடியுது. ஆனா நாட்ட ஆள்ற ஒரு தலைவனத் தேர்ந்தெடுக்கிற நம்மோட உரிமையான ஒரு ஓட்டு போட முடியல. ஓட்டுப் போட ஊருக்கு கூட போக முடியல. எல்லாம் பொருளாதாரம் என்ன வாழ்க்கை இது?
“எஸ்… இது தான் நம்மோட நிலைமை என்றான் ஜெய்.
ஜெய் இத இந்த எலெக்சனோட மாத்தணும். நம்ம நிலைமையையும் அடுத்த எலெக்சனுக்குள்ள அடுத்த எடத்துக்கு கொண்டு போகணும் என்று நண்பர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.
“டேய் அருண், உன்னோட ஸ்கிரிப்ட் என்னாச்சு?
“ம்ம , முடிஞ்சிட்டேன்”
“என்னும் மாதிரியான சப்ஜெக்ட்,
“பொலிடிக்ல் அண்டு திரில்லர்,
“ஓ அப்படியா?
ஆமா பிரபாகர்”
படத்தோட தலைப்பு என்ன?
“இந்தியாவோட அடுத்த பிரதமர்” அருண் சொன்னதைக் கேட்ட அத்தனை பேரும் வாய்விட்டு சிரித்தனர்.
அந்த சிரிப்புச் சத்தம் பூங்காவையும் தாண்டிக் கேட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *