செய்திகள்

சோழவந்தான் பகுதியில் ‘கொரோனா வைரஸ்’ தடுப்பு விழிப்புணர்வு முகாம்

Spread the love

சோழவந்தான்,மார்ச்.26-

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சோழவந்தான் பகுதியில் மேலக்கால் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பேரூராட்சி சார்பாக விழிப்புணர்வு முகால் நடைபெற்றது.

அலுவலங்கள் சமுதாய கூட கட்டிடங்கள், பேருந்து நிலையம், பேருந்து நிறுத்தங்கள், வணிக வளாக கட்டிடங்கள், வங்கிகள், காவல் நிலையம், தீயணைப்பு நிலையம், ரயில் நிலையம் உட்பட பொது இடங்களில் (லைசால்) கிருமி நாசினி ஸ்ப்ரே மூலம் அடித்தனர். விழிப்புணர்வு போர்டு வைத்து,விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்கள். இதில் சுகாதாரத்துறை சேர்ந்த மருத்துவர் மற்றும் சுகாதார ஆய்வாளர் கிருஷ்ணன், பேரூராட்சி செயல் அலுவலர் ஜீலான்பானு, தூய்மைப் பணி ஆய்வாளர் குருசங்கர் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் சோழவந்தான் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன், பழனிமுத்து ஆகியோர் தலைமையில் தீயணைப்பு நிலைய காவலர்கள் சோழவந்தான் பஸ் நிலையம், வட்ட பிள்ளையார் கோவில் மற்றும் மாரியம்மன் கோவில் முன்பு உட்பட இப்பகுதியில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு ஒலிபெருக்கி மூலமாக ஏற்படுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *