செய்திகள்

சோழமண்டலம் பைனான்சியல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் லாபம் 2ம் காலாண்டில் ரூ.325.15 கோடி

Spread the love

சென்னை, நவ. 10

முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த சோழமண்டலம் பைனான்சியல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் லாபம் 2ம் காலாண்டில் ரூ.325.15 கோடியாக இருந்தது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:–

‘நடப்பு நிதியாண்டின் செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.3,340.64 கோடியாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டில் இதே காலக்கட்டத்தில் ஈட்டிய லாபம் ரூ.2,614.66 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம்.

ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.324.53 கோடியிலிருந்து ரூ.325.15 கோடியாக சற்று உயர்ந்துள்ளது.

செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த முதல் 6 மாத காலத்தில் நிறுவனத்தின் மொத்த வருவாய் கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.5,090.26 கோடியிலிருந்து ரூ.6,463.31 கோடியாக அதிகரித்தது. வரிக்கு பிந்தைய லாபம் ரூ.638.17 கோடியிலிருந்து உயர்ந்து ரூ.655.17 கோடியானது.

நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் ரூ.15,954 கோடி மதிப்பிலான கடன்கள் வழங்கப்பட்டன. கடந்த நிதியாண்டில் இதே காலக்கட்டத்தில் வழங்கப்பட்ட கடன் ரூ.13,913 கோடியாக இருந்தது.

இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *