செய்திகள்

சோழன் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

காஞ்சீபுரம், ஜன. 12-–

தேசிய இளைஞர் தினத்தையொட்டி காஞ்சீபுரம் சோழன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர் விழிப்புணர்வு பேரணியை காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்ட் எம்.பாலசுப்பிரமணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

காஞ்சீபுரம் ஏகாம்பரபுரம் தெருவில் சோழன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.இப்பள்ளியில் விவேகானந்தர் பிறந்த தினத்தையொட்டி, அவரது கொள்கைகளை விளக்கி, மாணவர்கள் பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு பேரணி நடத்தினர். காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்ட் எம்.பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு கொடியசைத்து இப்பேரணியை தொடங்கி வைத்தார்.

இதில் பள்ளி தாளாளர் தொ.சஞ்சீவிஜெயராம் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது. இதை தொடர்ந்து அமைதி,அகிம்சை, ஒற்றுமைகளை வலியுறுத்தி சோழன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். முடிவில் பள்ளி முதல்வர் ஆர்.ஞானபண்டிதன் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *