சிறுகதை

சோப்பு – ராஜா செல்லமுத்து

தியா எப்போதும் போல அன்றும் தன் விளம்பரப் படத்திற்காக ஸ்டுடியோவுக்குள் இருந்தார். அவர்களை வரவேற்று உள்ளே அழைத்து சென்றார் உதவி இயக்குனர்.

உள்ளே சென்ற தியாவை இயக்குனர் வரவேற்று சோப்பு விளம்பரம் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார் . அது ஒரு குளியலறை காட்சி. குளித்துக்கொண்டே சோப்பின் நறுமணத்தையும் சோப்பையும் பற்றிச் சொல்ல வேண்டும் என்று காட்சியை விளக்கினார் இயக்குனர்.

இந்த சோப்போட பெயர் என்ன என்று கேட்டாள் தியா.

சோப்பை எடுத்து தியாவின் கையில் கொடுத்த இயக்குனர் இது மல்லி சோப் . சாதாரண மல்லி இல்லை ; ஸ்பெஷல் மல்லி சோப்பு .இதுல குளிச்சா உங்களுக்கு முடி உதிராது. சருமம் நல்லா இருக்கும் ; புத்துணர்ச்சியோடு இருக்கலாம்; உடம்புல நல்ல வாசனையைக் கொடுக்கும் .

காலையில குளிச்சா இரவு வரைக்கும் சோப்போட மணம் இருக்கும். எல்லாரும் மல்லி சோப்பு வாங்குங்க . மல்லி சோப் வாங்கிக் குளிச்சா. நீங்க வெற்றியை சொல்லி அடிக்கலாம்; இதுதான் ஸ்கிரிப்ட் என்று தியாவிடம் விளக்கினார் இயக்குனர்.

ஸ்கிரிப்ட்டை மனப்பாடம் செய்து கொண்டார் தியா. ஒருமுறைக்கு இரு முறை என ஸ்கிரிப்ட்டை மனப்பாடம் செய்துவிட்டு, நான் ரெடி என்றாள் தியா.

குளியல் அறைக்குள் நுழைந்து குளிக்க ஆரம்பித்தாள். அப்போது ஸ்டார்ட், கேமரா, ஆக்சன் சொல்லிய இயக்குனர் தியாவை வசனங்களை சொல்லச் சொன்னார்.

தியா வசனங்களை உணர்ச்சியோடு அதே சமயம் விளம்பரத்திற்கான உக்தியோடும் சொன்னார்.

ஒரே டேக்கில் ஷாட் ஓகே ஆனது .

குட் குட் குட் தியாவைப் பாராட்டினார் இயக்குனர்.

குளியலறை காட்சி முடித்து சோப்பு பற்றிய உயர்வான எண்ணங்கள். உயர்வான வசனங்கள் என்று அத்தனையும் எடுத்தார் இயக்குனர்.

காலை முதல் மாலை வரை சோப்பின் வாசனை உள்ளும் புறமுமாய் கழிந்தது. படப்பிடிப்பு அந்த இரவோடு முடிந்தது

பேக்கப் என்று இயக்குனர் சொல்ல

வீட்டுக்குப் போகும் ஆவலில் அத்தனை பேரும் ஆவலாக இருந்தார்கள்.

எல்லோருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு இயக்குனரும் நடிகையும் அந்த அரங்கத்தை விட்டு வெளியேறினார்கள்.

கார் வேகமாகப் போய்க் கொண்டிருந்தது.

ஒரு திருப்பத்தில் காரை நிறுத்தச் சொன்னார் இயக்குனர்.

என்ன சார் என்ன ஆச்சு

என்றான் ஓட்டுனர்.

ஒன்னும் இல்ல வீட்டுல குளிக்கிறதுக்கு சோப்பு இல்லை வாங்கிட்டு வாங்க என்று ஓட்டுனரை அனுப்பினார்.

சார் நம்ம சோப்பு தானே ?வாங்கிட்டு வரவா? என்று ஓட்டுநரே கேட்டார்.

அந்த சோப் வேண்டாம்.வேற வாங்கிட்டு வாங்க என்று ஒரு குறிப்பிட்ட சோப்பின் பெயரைச் சொல்லி அனுப்பினார் இயக்குநர்

என்ன இப்பத்தான் மல்லி சோப்பு பத்தி ரொம்ப பெருசா பேசி விளம்பர எடுத்தாங்க .இவர வாங்க மாட்டேங்குறார் என்ன காரணம்? என்று குழம்பிய ஓட்டுநர் வேறு சோப்புடன் காருக்கு வந்தார். ஓட்டுநர் உதடு வரை வந்த வார்த்தையை கேட்டு விட வேண்டும் என்று முடிவு செய்து விட்டார்.

ஏன் சார் மல்லி சோப்பு பத்தி விளம்பரத்தை எடுத்திட்டு வேற சோறு வாங்குறீங்க? என்று ஓட்டுநர் கேட்டுக்கொண்டே கார் ஓட்டினார்.

அவரைப் பார்த்து சிரித்த இயக்குனர் மெல்ல சொன்னார்:

அது வெறும் விளம்பரம் மட்டும் தான் என்று ஒற்றை வார்த்தையில் பதில்சொன்னார் இயக்குனர்.

அந்த வார்த்தையை கேட்ட

டிரைவரின் மூளை கரகரவென்று சுற்றியது.

ராஜா செல்லமுத்துவின் பிற கதைகள்:

அதிகப்படியான ஆசை

அன்பின் உச்சம்

கடன்

செல் நம்பர்

தோல்வி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *