செய்திகள்

சோனியா பிறந்தநாள்: ஸ்டாலின் வாழ்த்து

Makkal Kural Official

சென்னை, டிச.9–

காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:–

காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்திக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.

பெரும் சவால்களை எதிர்கொண்டு முன்னேறி, மேன்மைப்பண்பு கொண்ட தலைவராகத் தொடர்வது என அவரது வாழ்க்கைப் பயணம் அவரது போராட்டக்குணத்துக்கும் அர்ப்பணிப்புக்கும் சான்றாகத் திகழ்கிறது.

வெற்றியும் அமைதியும் நிறைந்து – நீண்டகாலம் அவர் நல்ல உடல்நலத்துடன் திகழ விழைகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *