செய்திகள்

சோனியா காந்தி பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

Makkal Kural Official

சென்னை, டிச.9–

சோனியா காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி, நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாளையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:–

காங்கிரஸ் பேரியக்கத்தின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி அம்மையாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். தியாகம், தன்னலமற்ற பொதுவாழ்வுப் பயணம், மதச்சார்பின்மை மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களை நிலைநாட்டும் உறுதியைப் பிரதிபலிப்பதாக அவரது வாழ்க்கை அமைந்துள்ளது.

முற்போக்கான, அனைவருக்குமான இந்தியாவை நோக்கிய நமது கூட்டு முயற்சிகளுக்கு அவரது கொள்கைப் பாதையும் வழிகாட்டுதலும் தொடர்ந்து வலுவூட்ட வேண்டும் என விழைகிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *