சிறுகதை

சொந்த ஊர் – ராஜா செல்லமுத்து

நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு வாசனுக்கு சென்னையில் வேலை கிடைத்தது.

கிடைத்த வேலையில் மனநிறைவு அவன் பணி செய்யும் இடத்தில் இருந்து தங்குவதற்கு ஏதுவாக அருகிலேயே ஒரு நண்பரின் அருகில் தங்கினான்.

அவனது அறையில் இருந்த நண்பர்கள் வாசனைப் பற்றி விசாரித்தார்கள்.

‘எந்த ஊரு என்றான்?’ ஒருவன்.

‘மதுரை பக்கம்’ என்றான் வாசன்.

‘மதுரைன்னா மதுரை சிட்டியா? இல்ல பக்கத்துக் கிராமமா?’ என்று கேட்டான் ஒருவன்.

‘மதுரை பக்கத்துல இருக்குற ஒரு ஊர்’ என்று சமாளித்தான் வாசன்.

‘எந்த ஊரு? மதுரைப் பக்கத்துல’ என்று ஒருவன் முறைத்துக் கேட்டபோது,

‘வாடிப்பட்டி’ என்றான் வாசன்.

‘வாடிப்பட்டி, வாடிப்பட்டி சொந்த ஊர் இல்ல. வாடிப்பட்டி பக்கத்துல கிராமம்’ என்றான்.

‘வாடிப்பட்டி பக்கத்துல கொஞ்சம் தள்ளி, ஒரு சின்ன கிராமம்’ என்றான்.

‘அப்படி சொல்ல வேண்டியதுதானே? மதுரை வாடிப்பட்டி கொஞ்சம் தள்ளி /அதை சொல்றத விட்டுட்டு, சுத்தி வளச்சி சொன்னா எப்படி?’ என்று கேட்டான் நண்பன்.

‘இல்ல… மதுரை அப்படின்னு சொன்னா தெரியும்னுதான் சொன்னேன்’ என்று சமாளித்தாள் வாசன்.

‘இல்ல தம்பி நீங்க எங்க போனாலும் உங்க சொந்த ஊரைச் சொல்லுங்க அதுக்கப்புறம் அது எந்த மாவட்டத்தில் இருக்குன்னு சொல்லுங்க. இல்ல பக்கத்தில் இருக்கும் பிரபலமான ஒரு இடத்தைச் சொல்லுங்க. அதை விட்டுட்டு மதுரை அப்படின்னு சொல்லி சமாளிக்கிறது தப்பு’ என்றார் ஒருவர்.

‘ஏங்க நான் சொன்னது தப்பு இல்லைங்க. இந்த மனுசங்க எல்லாமே பக்கத்தில் இருக்கற பெரிய ஊரைச் சொல்லுவாங்க. நம்ம மனுஷங்களை எப்படி பார்க்கிறாங்க தெரியுமா?தமிழ்நாட்டை விட்டு நீங்க வெளிய போனா நீங்க தமிழ்நாட்டை சேர்ந்தவர் இங்க இருந்து வேற நாடு போனா நீ இந்தியாவை சேர்ந்தவர். இந்த கண்டத்தில் இருந்து இன்னொரு கண்டத்துக்கு போனா நீங்க ஆசியா கண்டத்தைச் சேர்ந்தவர். இந்த பூமியிலிருந்து வேற பூமிக்கு போனா நீங்க பூமியில வாழற மனுஷன். இதுதான் உங்கள் அடையாளம். அதனால எந்த மனிதனுக்கும் இங்க தனி அடையாளங்கள் ஒன்னும் இல்ல. நான் சொன்னது தப்பு இல்லனு நினைக்கிறேன்’ என்றான்.

‘சூப்பர் வாசன், நீ சொல்வது சரிதான். கிராமத்தை விட்டு விட்டு போனா, நம்ம கிராமத்தை ஒட்டி இருக்கிற ஊர் தான் நமக்கு சொந்த ஊரு. சென்னையை விட்டு வேற மாநிலம் போனா நம்ம தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டை விட்டு வேற மாநிலம் போனா நாம இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இந்தியா விட்டு வேற கண்டம் ஆசியா கண்டத்தைச் சேர்ந்தவர்கள். இந்தப் பூமியை விட்டு வேற கோளுக்கு போனால் நாம பூமியில வாழ்றவங்க. நெத்தியடி பதில் வாசன். இதுதான் மனிதர்களுடைய அடையாளம். இப்படி தான் சொல்லணும்’ என்றான் உடன் இருந்த நண்பன்.

‘இனிமேல் நீ எந்த ஊருன்னு கேப்ப?’ என்று சொன்னான் அருகில் நின்றிருந்த மற்றொரு நண்பன்.

‘அது துபாய் பக்கத்துல துபாய் குறுக்கு சந்து, துபாய் மெயின் ரோடு, துபாய் பஸ் ஸ்டாண்ட்’ என்று வடிவேல் ஜோக் சொல்ல முடியாது.

‘எல்லாமே ஒரு அடையாளத்துக்குத் தான் ஊர் அப்படிங்கிறது. நமக்கானது அந்த ஊரிலிருந்து நாம என்ன செஞ்சு வந்திருக்கோம்; அப்படிங்கிற தான் பெருமை. நாம ஜெயிச்சதுக்கு அப்புறம் நம்ம கிராமத்தைப் பெரும் பேசட்டும். அதுவரைக்கும் அதுக்கு பக்கத்துல இருக்குற ஊர் பேர நாம சொல்லுவோம்’ என்றான் வாசன்.

அவன் பேசியதை ஆமோதித்து, ஆர்ப்பரித்து அத்தனை பேரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.