செய்திகள்

சொகுசு வசதிகளுடன் ‘நைட் ஈகிள்’ ஜீப் காம்பஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்

சென்னை, ஆக. 4–

பியட் கிறிஸ்லர் கார் நிறுவனம், இந்தியாவில் ஜீப் காம்பஸ் சொகுசு காரை அறிமுகம் செய்து 3 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி புதியதாக ‘நைட் ஈகிள்’ என்னும் புதிய காரை அறிமுகம் செய்து உள்ளது. இது உலக அளவில் வெளியாகிறது என்று நிறுவன நிர்வாக இயக்குனர் பார்த்தா தத்தா தெரிவித்தார்.

இந்த காம்பஸ் கார் மொத்தம் 250 மட்டுமே தயாரிக்கப்படுகிறது. இதற்கு ஆன்லைன் பதிவு துவங்கப் பட்டுள்ளது. அதிகபட்ச என்ஜினீயரிங் திறமையுடன் உலக தரம் பாதுகாப்பு நம்பகத்தன்மை கொண்டுள்ளது.

இந்தியாவில் பியட் கிறிஸ்லர் நிறுவனம் ரூ.2000 கோடி அளவுக்கு முதலீடு செய்து நவீன தொழிற்சாலை நிறுவி உள்ளது. இது வெளிநாட்டுக்கும் ஜீப் காம்பஸ் கார்களை ஏற்றுமதி செய்கிறது.

இந்தக் காரின் விலை ரூ.16.49 லட்சம் முதல், ரூ.25 லட்சம் வரை. இது பற்றி அறிய www.bookmy jeep.com வலைதளத்தைப் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *