செய்திகள்

சொகுசு காருக்கு வரி விலக்கு கேட்டு நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் வழக்கு

சென்னை, ஆக. 4–

வெளிநாட்டு இறக்குமதி காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரிய நடிகர் தனுஷ் மனு மீது, சென்னை உயர் நீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்கிறது.

நடிகர் தனுஷ், கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காரை வாங்கினார். அந்த காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடைகோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ரூ.60.66 லட்சம் நுழைவு வரியாக செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டதை எதிர்த்து, தனுஷ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 50 சதவீத வரியை செலுத்தினால், காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

வழக்கு தள்ளிவைப்பு

அதன்படி, ரூ.30 லட்சத்து 33 ஆயிரத்தை செலுத்தியதாக, தனுஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, விதிகளை பின்பற்றி பதிவு செய்ய 2016 ஏப்ரலில் நீதிபதி துரைசாமி உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நடிகர் தனுஷ் தரப்பில் வழக்கறிஞர்கள் எவரும் ஆஜராகாததால், விசாரணையை ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

ஏற்கெனவே நுழைவு வரி வசூலிக்க தடை கோரி வழக்கு தொடர்ந்த நடிகர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்பட்டு, அதில் மேல்முறையீடு சென்று தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் தனுஷ் தாக்கல் செய்த வழக்கு நாளைய தினம் விசாரணைக்கு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *