வாழ்வியல்

சைபீரியப் பனிப் பாலைவனம் உருவானது எப்போது?

சைபீரியப் பனிப் பாலைவனம் உருவானது எப்போது? விபரம் அறிய தொடர்ந்து படியுங்கள் : –

18,00,000 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய நிலவியல் காலத்தில்தான் (பிளீஸ்டோ சீன்) சைபீரியப் பனிப் பாலைவனம் உருவானது. இதுதான் பனியுகம். பூமியில் பெரும்பகுதி பனி படர்ந்து இருந்தது. இந்தப் பனியுறைக் காலம் சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு முடிந்தது. அதன் பிறகு சற்றே இளம் வெப்பநிலையில் பூமி இருந்தது. இதனைப் பனியுக இடைக்காலம் என்பார்கள். சைபீரியப் பனிப் பாலைவனத்தில் திரவ நீர் அகன்று அங்கே திடவடிவில் பனி உருவானபோது ரோட்டிஃபர்கள் ஆழ்ந்த உறக்கத்துக்குச் சென்றன.

பல ஆயிரம் ஆண்டுகள் உறைந்த நிலையில் இருக்கும் இந்தப் பகுதியில் 3.5 மீட்டர் ஆழத்துக்குத் துளையிட்டு, பனி கலந்த மண்ணை எடுத்துப் பரிசோதனை செய்தார்கள். உறைகுளிர் வெப்ப நிலையில் இருந்த இந்த மண்ணை இயல்பு அறை வெப்பநிலைக்குக் கொண்டுவந்தார்கள். சுமார் ஐந்து வாரத்துக்கு ஒவ்வொரு நாளும் உறைநிலை குளிர் விலகி உருகும் மண்ணைப் பரிசோதனை செய்தனர். இறுதில் பல ரோட்டிஃபர்கள் ஆழ் உறக்க நிலையிலிருந்து விழித்துச் செயல்படுவதைக் கண்டனர்.

சைபீரியப் பனிப்பாலைவனத்தின் சில பகுதிகளில் 4,00,000 ஆண்டுகள் தொன்மையான மண் மாதிரிகளை, கார்பன் காலக் கணிப்புத் தொழில்நுட்பம் வழியே இனம் கண்டுள்ளனர். சில இடங்களில் சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு மடிந்த உயிரியின் தொல் எச்சம் கிடைத்துள்ளது. மறுபடி உயிர்த்தெழுந்த ரோட்டிஃபர்கள் இருந்த மண் மாதிரியை கார்பன் காலக் கணிப்பு முறை மூலம் அளந்தபோது, அவை சுமார் 24,000 ஆண்டுகளுக்கு முன்பு உறக்க நிலைக்குச் சென்றவை என்று கண்டறிந்துள்ளனர்.

இதுவரை டெல்டாய்டு ரோட்டிஃபர்கள் கிரிப்டோ பயோசிஸ் நிலைக்குச் சென்று கூடுதலாகச் சில பத்தாண்டுகள் கடந்த பின்னர் மட்டுமே மறுபடி மீண்டெழும் ஆற்றலைப் பெற்று இருக்கும் என்று அறிவியல் உலகம் கருதியிருந்தது. சில பத்தாயிரம் ஆண்டுகள் கடந்த பின்னரும் இவை மறுபடி செயல்படமுடிவதைக் கண்டு அறிவியல் உலகம் வியந்திருக்கிறது. சிதையாமல் செல் அளவில் இவை இவ்வளவு காலம் உயிர்ப்போடு இருப்பது எப்படி என்று ஆய்வுகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *