செய்திகள்

சைதாப்பேட்டை செளந்தரேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா

Spread the love

சென்னை, ஜூன் 19–

சைதாப்பேட்டையில் உள்ள திரிபுரசுந்தரி உடனுறை செளந்தரேசுவரர் கோவில் பிரம்மோற்சவ விழா 29–ந் தேதி தொடங்குகிறது. ஜூலை 5–ந் தேதி தேரோட்டமும், 8–ந் தேதி ஆனித் திருமஞ்சனமும், திருகல்யாண உற்சவமும் நடைபெறுகிறது.

சென்னை, சைதாப்பேட்டை, வடதிருநாரையூர், பிராமணர் தெருவில் அமைந்துள்ள திரிபுரசுந்தரி உடனுறை செளந்தரேசுவரர் கோவில் பிரம்மோற்சவ விழா 29–ந் தேதி காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முன்னதாக 28–ந் தேதி இரவு 7 மணிக்கு விநாயகர் உற்சவம் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து ஜூலை 1–ந் தேதி காலை 6 மணிக்கு அதிகார நந்தி சேவையும், 5–ந் தேதி காலை 7 மணி முதல் 8 மணிக்குள் திருத்தேர் உற்சவமும் நடைபெறுகிறது.

8–ந் தேதி காலை 7 மணி முதல் 10 மணி வரை ஸ்ரீ நடராஜருக்கு ஆனித் திருமஞ்சனம், பஞ்ச மூர்த்திகள் தீர்த்தவாரியும் நடைபெறும். அன்றிரவு 6.30 மணிக்கு திருக்கைலாய சபை சார்பில் திருகல்யாண உற்சவமுமம், சுவாமி திருக்கைலாய வகானத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறும். 9–ந் தேதி காலை 8 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 10–ந் தேதி காலை 9 மணிக்கு உற்சவ சாந்தியும், 108 சங்காபிஷேகமும், மாலை 6.30 மணிக்கு ஏகாந்த சேவையும் நடைபெறுகிறது. விழாவையொட்டி தினமும் மாலையில் சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர்.

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி க.அருட்செல்வம், தக்கார் பி.லட்சுமிகாந்த பாரதிதாசன், திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *