செய்திகள்

சைக்கிள் சர்ச்சை: விஜய் விளக்கம்

சென்னை, ஏப். 6–

சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன்? என்பது குறித்து நடிகர் விஜய் விளக்கம் அளித்திருக்கிறார்.

சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன்? என்பது குறித்து வெளியான செய்திகளால், நடிகர் விஜய் தனது செய்தித் தொடர்பாளர் ரியாஸ் மூலமாக அளித்துள்ள விளக்கத்தில் கூறி இருப்பதாவது:–

தனது வீட்டில் இருந்து வாக்குச்சாவடி குறைந்த தூரத்தில் இருந்ததாலும், குறுகலான சாலை என்பதால் அதில் காரில் சென்று வருவது சிரமம். அப்படியே காரில் சென்று திரும்பினாலும் வாக்குச்சாவடி இருக்கும் இடம் குறுகலான இடம் என்பதால், சாலையில் காரை நிறுத்த முடியாது. அப்படியே சிரமப்பட்டு சென்று வாக்குச்சாவடிக்கு சென்று வர நேர விரயமாகும். அதனால்தான் சைக்கிளில் சென்று வாக்களித்து விட முடிவு செய்து அதன்படியே செய்தேன் என்று தெரிவித்திருக்கிறார்.

விஜய் ஏற்படுத்திய பரபரப்பு

நடிகர் விஜய் தனது இல்லத்தில் இருந்து வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்தார். உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் , சைக்கிளில் ஓட்டு போட வந்தது பரபரப்பாக பேசப்பட்டது.

சைக்கிளில் வந்த விஜய் வாக்குச்சாவடிக்குள் ஓட்டுப்போட்டுக் கொண்டிருக்கும்போது, பெட்ரோல் – டீசல் விலையேற்றத்தினால்தான், அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், விஜய் சைக்கிளில் வந்தார் என்று செய்திகள் பரவ, அது விஜய் காதுக்கு சென்றது. எனவே, வாக்களித்துவிட்டு திரும்பி செல்லும்போது, சைக்கிளில் செல்லாமல் ஸ்கூட்டரில் சென்றார்.

பெட்ரோல் -டீசல் விலையேற்றத்தினால்தான் விஜய் சைக்கிளில் வந்ததாக தொலைக் காட்சிகளிலும் சமூக வலைத்தளங்களிலும் தகவல்கள் பரவியது. எனவே தான் சைக்கிளில் சென்ற உண்மையான காரணத்தை விஜய் சொல்லி இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *