செய்திகள்

சோனாலிகா நிறுவனம் 1.14 லட்சம் டிராக்டர் விற்று சாதனை: ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி அதிகரிப்பு

சென்னை, ஏப்.5

சோனாலிகா டிராக்டர் நிறுவனம், கடந்த நிதியாண்டில் மட்டும் 1.14 லட்சம் அதிகமான டிராக்டர்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து சோனாலிகா குழுமத்தின் செயல் இயக்குநர் ரமன் மித்தல் கூறுகையில், “சோனாலிகா நிறுவனம் 4 நாடுகளில் டிராக்டர்கள் விற்பனையில் முன்னிலை வகித்து வருகிறது. கடந்த 2018 -19 நிதியாண்டில் (ஏப்ரல்- மார்ச்) 1 லட்சத்து 14 ஆயிரத்து 057 டிராக்டர்களை இந்நிறுவனம் விற்பனை செய்து 13.8 % வளர்ச்சியை எட்டியுள்ளது. இது, இத்துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதத்தை காட்டிலும் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான 11 மாத காலத்தில் மட்டும் சோனாலிகா டிராக்டர்கள் விற்பனை ஒரு லட்சத்தை தாண்டியது.

அதேபோன்று, நிறுவனத்தின் ஏற்றுமதியும் 28.9 சதவீத வளர்ச்சி கண்டு 18 ஆயிரத்து 081 டிராக்டர்களாக உயர்ந்துள்ளது. சோனாலிகாவின் நட்சத்திர தயாரிப்பான “சிக்கந்தர்” டிராக்டர்களுக்கு, நாடு முழுவதிலுமுள்ள விவசாயி களிடமிருந்து அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. இதையடுத்து, தென் மாநில சந்தைகளில் விற்பனையை அதிகரிக்கும் வகையில் நிறுவனம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

புதிய தயாரிப்புகளை உருவாக்க சோனாலிகா நிறுவனம் அதிநவீன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை டெல்லி-என்சிஆர் பகுதியில் அமைத்துள்ளது. ஐரோப்பாவில் எங்களின் விற்பனையை வலுப்படுத்தியுள்ளோம். நவீன என்ஜின் பொருத்தப்பட்ட டிராக்டர்களை முதன் முதலில் அறிமுகம் செய்ததன் மூலம் சோனாலிகா நிறுவனம் உலகளவில் டிராக்டர் விற்பனையில் தனி முத்திரை பதித்து வருகிறது என்றார் ரமன் மித்தல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *