இந்தியா சுதந்திரம் பெற்று 7 ஆண்டுகள் கடந்த பிறகு, அதாவது 1954 ஜனவரி 2ஆம் தேதியில் தான் பாரத ரத்னா மற்றும் பத்ம விபூஷண் ஆகிய உயரிய குடிமகன் விருதுகளை இந்திய அரசு அறிமுகப்படுத்தியது. அரசியல் சுதந்திரம் மட்டுமல்ல, அறிவு, பண்பாடு, அறிவியல், கல்வி, பொது சேவை போன்ற துறைகளிலும் இந்தியாவின் தனித்த அடையாளத்தை உலகிற்கு நிலைநிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடாகவே இவ்விருதுகள் உருவாக்கப்பட்டன. உண்மையான மூலதனம்:
முதல் பாரத ரத்னா விருது பெற்ற மூவரும், சி. ராஜகோபாலாச்சாரி, சர் சி.வி. ராமன், மற்றும் டாக்டர் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் ஆகியோர் மதராஸ் மாகாணத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் ஆவர்.
இவர்களின் தேர்வு, “சேவையும் அறிவும் தான் நாட்டின் உண்மையான மூலதனம்” என்ற செய்தியை தெளிவாகப் பதிவு செய்தது.
அந்த காலகட்டத்தில் இந்த விருதுகள், புதிய நாட்டின் அளவுகோளாக பாரம்பரியத்தின் இருந்த நல்லதோர் கருவியாக இருந்தது. அரசியல் அதிகாரத்தைவிட சமூக பங்களிப்பு, சிந்தனைச் சுதந்திரம், அறிவாற்றல் ஆகியவற்றை உயர்த்திப் பிடிப்பதே அவற்றின் நோக்கமாக இருந்தது.
இன்றைய காலத்தில், பாரத ரத்னா மற்றும் பத்ம விருதுகள், காலம் மாறினாலும், “தேச சேவையே உயரிய கௌரவம்” என்ற அடிப்படை கருத்து இவ்விருதுகளின் முக்கியத்துவமாக இருக்கிறது
![]()





